Thursday, 5 November 2009

தவறாக அனுப்பிய மின்னஞ்சலை தடுத்து நிறுத்த


சில சமயங்களில் Gmail லில் எவருக்காவது மின்னஞ்சல் செய்யும்பொழுது, Send கொடுத்தபிறகுதான் நினைவுக்கு வரும், அதில் ஏதாவது தவறுகளோ அல்லது குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்பவேண்டிய மெயிலை வேறு எவருடைய விலாசத்திற்கோ அனுப்பிய விஷயம்.

உடனடியாக உலவியை க்ளோஸ் செய்வது, அல்லது இணைய கேபிளை நீக்குவது என டென்ஷனில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் அல்லாட வேண்டியிருக்கும். ஆனால்  நீங்கள் என்னதான் செய்தாலும் மெயில் அனுப்பப்பட்டு விடும். இதற்கு ஜிமெயிலில் Undo வசதி இருந்தால் எப்படி இருக்கும்?

Google Labs வழங்கும் Undo send என்ற வசதி சில சமயங்களில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஜிமெயிலில் இந்த வசதியை உருவாக்க,

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள், பிறகு வலது மேல் மூலையிலுள்ள Settings Link ஐ கிளிக் செய்து அதில் Labs லிங்கை கிளிக் செய்து, பட்டியலில் Undo send என்பதற்கு நேராக உள்ள enable என்பதை கிளிக் செய்யுங்கள். 



இனி send கொடுத்தபிறகு வரும் confirmation செய்தியில் Undo என்ற வசதி வந்திருக்கும். இதை கிளிக் செய்தால் போதுமானது.




ஆனால் இந்த வசதி நீங்கள் மெயிலை send கொடுத்தபிறகு ஐந்து விநாடிகள் மட்டுமே உங்கள் மெயிலை தடுத்து வைக்கும். ஏற்கனவே அனுப்பப்பட்ட மெயிலை திரும்ப பெறாது.  (எதுவானாலும் கணினியை அணைப்பதை விட இது நல்ல முறையாக தெரிகிறது.)


.

25 comments:

  1. முனைவர்.இரா.குணசீலன்5 November 2009 at 11:30 pm

    நல்ல குறிப்பு நண்பரே..

    ReplyDelete
  2. ஆ.ஞானசேகரன்5 November 2009 at 11:36 pm

    பகிர்வுக்கு நன்றி நண்பா,...

    ReplyDelete
  3. சூர்யா ௧ண்ணன்6 November 2009 at 12:30 am

    நன்றி முனைவர்.இரா.குணசீலன்

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்6 November 2009 at 12:31 am

    நன்றி ஃபெரோஸ்

    ReplyDelete
  5. சூர்யா ௧ண்ணன்6 November 2009 at 12:31 am

    நன்றி ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  6. கலகலப்ரியா6 November 2009 at 12:44 am

    5 vinaadiyaa..? yabbe.. naan enna computeraa.. inga undo panna... anga automatic a delete aanaa evlo nallaa irukkum.. =))..

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. சூர்யா ௧ண்ணன்6 November 2009 at 2:48 am

    நன்றி சுபாங்கன்

    ReplyDelete
  9. சூர்யா ௧ண்ணன்6 November 2009 at 2:48 am

    நன்றிங்க கலகலப்ரியா! நல்லாத்தான் இருக்கும். ஆனா அப்படி ஒரு வசதி இருந்தா, நாம ஏகப்பட்ட மிரட்டல் மெயிலை தைரியமா அனுப்பலாமே!

    ReplyDelete
  10. சி. கருணாகரசு6 November 2009 at 3:21 am

    நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. சூர்யா ௧ண்ணன்6 November 2009 at 3:27 am

    நன்றி சி. கருணாகரசு

    ReplyDelete
  12. ரவிபிரகாஷ்6 November 2009 at 4:44 am

    திரு.சூர்யா கண்ணன், கணினி ஞானம் இல்லாத என்னைப் போன்றவர்களுக்குப் பயன்படும்படியாக இப்படி உபயோகமான தகவல்களை அடிக்கடி கொடுக்க வேண்டுகிறேன். நன்றி!

    ReplyDelete
  13. சூர்யா ௧ண்ணன்6 November 2009 at 5:48 am

    நன்றி திரு. ரவி பிரகாஷ்

    ReplyDelete
  14. கற்போம் கற்பிப்போம்6 November 2009 at 6:30 am

    நன்றி திரு.சூர்யா நல்ல தகவல்....பகிர்ந்தமைக்கு நன்றி! தங்களின் மின்னஞ்ச‌ல் பார்த்தேன் திரு.சூர்யா எங்களது படைப்புகள் எதுவும் திருடு போஇ இருக்கவில்லை. ஆனால் அந்த பக்கத்தில் அவர்கள் என்னுடைய இணையதளத்தின் லோகோவை போட்டு வைதிருக்கிறார். அவ்வளவே...என்னுடைய படைப்புகள் ஏதும் இல்லை.தகவலுக்கு நன்ரி திரு.சூர்யா...

    ReplyDelete
  15. கடைக்குட்டி6 November 2009 at 9:38 am

    இத நான் யூஸ் பண்ணிட்டுத்தான் இருக்கேன்..ரொம்ப யூஸ்ஃபுல்..சில சமயம் attachment சேக்கமலேயே அனுப்புனா தடுத்து நிறுத்திர்லாம்..யாஹூ-ல ஏதாவது வழி இருக்கா????

    ReplyDelete
  16. cheena (சீனா)6 November 2009 at 4:14 pm

    நல்ல அரிய தகவல் - பகிர்ந்தமைக்கு நன்றி அன்பின் சூர்யா கண்ணன்நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  17. சூர்யா ௧ண்ணன்6 November 2009 at 8:18 pm

    நன்றி திரு. நித்தியானந்தம்!கடைக்குட்டி சீனா

    ReplyDelete
  18. சிங்கக்குட்டி7 November 2009 at 8:40 pm

    நல்ல பகிர்வு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. Very useful post anna...

    ReplyDelete
  20. சூரியா கண்ணன் சார்.வாங்க என் தளத்துக்கு நான் கொடுக்கும் அவார்டை வாங்கிக்கொள்ளுங்கள்.உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை.நன்றி வாழ்த்துக்கள். 1. யு எஸ் பி வைரஸ் பற்றி சொன்னீர்கள், அது ஒரு முறை செய்தால் போதுமா?ஒவ்வொரு முறை யு. எஸ். பி பயன் படுத்தும் போதும் செய்யனுமா?2. ப‌திவை போட்டு விட்டு, த‌மிலிஷ் ச‌ம்மிட் ப‌ண்ணிவிட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ப‌திவை ப‌டிக்கும் போது என் பிலாக்கும் ஓப்ப‌னில் இருக்கு, ம‌ற்ற‌ இருவ‌ரின் பிளாக்கிலும் ப‌தில் போட்டு விட்டு குளோஸ் ப‌ண்ணும் போது எண்ண‌ற்ற‌ க‌ண‌க்கில‌ட‌ங்கா வின்டோ ஓப்ப‌ன் ஆகுது,இத‌னால் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பிலாக்கிற்கு சென்று ப‌திலும் போட‌ முடிய‌ல‌, ஓட்டும் போட‌ முடிய‌ல‌ அதை எல்லாவ‌ற்றையும் குளோஸ் ப‌ண்ணுவ‌த‌ற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிற‌து அத‌ற்கு என்ன‌ செய்ய‌னும். சொல்லுங்க‌ளே...அதுக்கு

    ReplyDelete
  21. சூர்யா ௧ண்ணன்10 November 2009 at 4:43 am

    நன்றி coolzkarthi

    ReplyDelete
  22. சூர்யா ௧ண்ணன்10 November 2009 at 4:43 am

    நன்றி சிங்கக்குட்டி

    ReplyDelete
  23. சூர்யா ௧ண்ணன்10 November 2009 at 4:47 am

    விருதுக்கு மிக்க நன்றிங்க சகோதரி ஜலீலா! யு எஸ் பி ட்ரைவில் வைரஸ் இருப்பதாக சந்தேகம் வரும்பொழுது மட்டும் செய்தால் போதுமானது..நீங்கள் என்ன உலவியை உபயோகிக்கிறீர்கள் FireFox or Internet Explorer என்பதை சொன்னால் வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  24. மிகவும் பயனுள்ள ஒரு நல்ல தகவல்.
    நன்றி.

    ReplyDelete