Thursday, 19 November 2009

வலைப்பக்கத்திற்கான ஃப்ளாஷ் கோப்புகளை எளிதாக உருவாக்க

நீங்கள் விரும்பும் படங்களை கொண்டு, உங்களது வலைப்பக்கத்தில் உபயோகிப்பதற்கான ஃப்ளாஷ் கோப்புகளை எப்படி உருவாக்குவது என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்தப் பணிக்கான ஒரு மென்பொருள் Photo Flash Maker. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.


இதனை கணினியில் பதிவது மிகவும் எளிது. முதலில் இந்த மென்பொருளை துவக்கும் பொழுது, முதலில் வரும் திரையில், Slideshow Wizard ஐ தவிர்க்க, கீழ் இடது புறமுள்ள Don't show this wizard dialog next time என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள் (தேவைப்பட்டால்..)

  இதில் ஃப்ளாஷ் கோப்புகளை விசார்டை உபயோகித்து அல்லது இதில் உள்ள PHOTO, THEME, PUBLISH என்ற மூன்று படிநிலைகளை உபயோகித்து உருவாக்கலாம்.

இங்கு ஃபோட்டோ என்ற படி நிலையில் நமக்கு தேவையான படங்களை சேர்த்துக்கொள்ளலாம். அனைத்து படங்களையும் சேர்த்த பிறகு, இரண்டாம் படி நிலையான THEME இற்கு சென்று,

நீங்கள் விரும்பும் தீமை தேர்வு செய்து கொண்டு, PUBLISH டேபில் நீங்கள் உருவாக்கிய ஃப்ளாஷ் கோப்பிற்கான SWF மற்றும் HTML கோப்பு வகைக்கான பெயரை கொடுத்து Publish Now என்ற பொத்தானை அழுத்தவும்.

இணையத்தில் பதிவேற்றி பகிர்வதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது.

 மேலும் இந்த மென்பொருளில் இசையை சேர்ப்பது போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளன..


.

10 comments:

  1. பின்னோக்கி19 November 2009 at 6:50 am

    photoscape என்ற மென்பொருளும் இதற்கு உதவுகிறது.

    ReplyDelete
  2. வானம்பாடிகள்19 November 2009 at 7:17 am

    அடி தூள் சூர்யா. ரொம்ப நன்றி

    ReplyDelete
  3. தியாவின் பேனா19 November 2009 at 7:17 pm

    நல்ல தகவல்

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்19 November 2009 at 8:02 pm

    //பின்னோக்கி said... photoscape என்ற மென்பொருளும் இதற்கு உதவுகிறது.//நன்றி பின்னோக்கி!

    ReplyDelete
  5. சூர்யா ௧ண்ணன்19 November 2009 at 8:04 pm

    //தியாவின் பேனா said... நல்ல தகவல்//நன்றி தியாவின் பேனா!

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்19 November 2009 at 8:04 pm

    // வானம்பாடிகள் said... அடி தூள் சூர்யா. ரொம்ப நன்றி//நன்றி தலைவா!

    ReplyDelete
  7. interesting post!

    ReplyDelete
  8. அட்டகாசங்க...சூர்யா சார்.உங்களை பின் தொடர்பவர்களுக்கு பதிவு உடனே கிடைக்க ஏற்பாடு செய்யக்கூடாதா சூர்யா சார்.

    ReplyDelete
  9. சூர்யா ௧ண்ணன்20 November 2009 at 8:16 pm

    //Suvaiyaana Suvai said... interesting post! // நன்றிங்க..,

    ReplyDelete
  10. சூர்யா ௧ண்ணன்20 November 2009 at 8:18 pm

    // yavana rani said... அட்டகாசங்க...சூர்யா சார். உங்களை பின் தொடர்பவர்களுக்கு பதிவு உடனே கிடைக்க ஏற்பாடு செய்யக்கூடாதா சூர்யா சார்.//நன்றி யவன ராணி! .. இமெயிலில் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்... அல்லது உங்கள் இமெயில் முகவரியை எனக்கு அனுப்புங்கள்... நிச்சயம் அடுத்த பதிவு முதல் தங்களுக்கு அனுப்புகிறேன்.., suryakannan@gmail.com

    ReplyDelete