Wednesday, 28 October 2009

விண்டோஸ் விஸ்டாவில் ஸ்டார்ட்அப் மென்பொருட்களை நீக்க ..,

விண்டோஸ் விஸ்டா உபயோகிப்பவர்கள், தங்களது கணினியில் வலது புறம் கீழ்  மூலையிலுள்ள சிஸ்டம் ட்ரேயில் தேவையில்லாத பல ஐகான்கள் இருப்பதை பார்த்திருக்கலாம். இவை அனைத்தும் விண்டோஸ் பூட் ஆகும் பொழுது ஸ்டார்ட்அப்  -ல் சேர்க்கப்பட்டுள்ள மென்பொருட்களாகும்.

இவற்றில் சில நமக்கு தேவையில்லாதவைகளாக இருந்தால், அவற்றை ஸ்டார்ட் அப்பில் இருந்து நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

Control Panel ஐ திறந்து கொண்டு, அதில் Search Box -இல் Startup என டைப் செய்து என்டர் கொடுங்கள். உடனடியாக “Stop a program from running at startup” என்ற லிங்குடன் காண்பிக்கும். நீங்கள் நேரடியாக Windows Defender ஐ திறந்தால், அதில் பல மெனுக்களுடன் போராட வேண்டியிருக்கும்.



 இனி திறக்கும் Windows Defender திரையில் ஸ்டார்ட்அப் ப்ரோகிராம்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டிருக்கும்.




இந்த உபயோகமான வசதியை பயன்படுத்தி, ஒவ்வொரு ஸ்டார்ட் அப் மென் பொருட்களின் விவரங்களை அறிந்து கொள்வதுடன், தேவையில்லாதவற்றை நீக்குவது மற்றும் செயலிழக்கச் செய்வது போன்றவற்றை எளிதாக செய்யலாம்.



.


3 comments:

  1. முனைவர்.இரா.குணசீலன்28 October 2009 at 8:51 pm

    பயனுள்ள தகவல் நண்பரே....

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்28 October 2009 at 9:43 pm

    நன்றி முனைவர்.இரா.குணசீலன்

    ReplyDelete
  3. ஆ.ஞானசேகரன்29 October 2009 at 10:12 am

    மீண்டும் நல்ல பகிர்வாக இரூக்கு நண்பா

    ReplyDelete