Thursday, 18 June 2009

AutoCAD Tricks - ஆட்டோ கேட் இல்லாத கணினிக்கு டிராயிங் ஃபைலை எந்த வடிவில் மாற்றினால் நல்லது?


வழக்கமாக ஆட்டோ கேடில் நாம் ஒரு வரைபடத்தை உருவாக்கி சேமிக்கும் பொழுது அது DWG கோப்பாக இருக்கும். இந்த கோப்பு ஆட்டோ கேட் மென்பொருள் உள்ள கனினியில் மட்டுமே திறக்கும் படியாக இருக்கும்.

சில சமயங்களில் நமது வாடிக்கையாளருக்கு ஒரு டிராயிங்கை மின் அஞ்சல் செய்யும்படி இருக்கும். அதேவேளை அவரது கணினியில் ஆட்டோ கேட் மென் பொருள் இல்லாமல் இருக்கலாம். அல்லது ஆட்டோ கேட் உபயோகிக்க தெரியாதவராக இருக்கலாம்.

இதற்கு நம்மில் பலர் உபயோகிக்கும் வழி, அந்த கோப்பை JPG or Tiff கோப்பாக மாற்றி அனுப்புவது. ஆனால் இந்த முறையில் மாற்றப்படும் படங்கள் அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை அத்தோடு Background colour கருப்பு நிறமாக இருப்பதால், படத்தை பார்ப்பவருக்கும் ஒரு வித சலிப்பை தட்டும் விதமாக இருக்கும். பெரிய வரைபடமாக இருந்தால் அதை Zoom in / Zoom out செய்யும் பொழுது படத்தின் தரம் மிகவும் மோசமானதாக இருப்பதுடன். அதில் ஒரு Proffessional Touch இருக்காது. PDF கோப்பாக மாற்றுவதற்கும் நம்முடைய கணினியில் வசதி இருக்க வேண்டும்.

இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்க..,

விண்டோசில் WMF (Windows Meta File) என்ற வடிவம், அனைத்து கணினியிலும் திறக்கக் கூடியதாகவும் (Windows Picture and Fax viewer), எவ்வளவு பெரிதாக்கினாலும் தரம் குறையாமல் இருக்கும்.

வழக்கமாக ஆட்டோ கேடில் டிராயிங் ஏரியா கருப்பு நிறமாக இருக்கும். இதை வெள்ளை நிறமாக மாற்றுவோம்.

Tools menu விற்கு சென்று Options கிளிக் செய்யவும். இதில் Display tab-ல் Colours பட்டனை கிளிக் செய்து Window Element - இன் கீழ் Model Tab Background என்று இருப்பதில் நிறத்தை Black இற்கு பதிலாக White ஐ தேர்வு செய்து கொள்ளவும். Apply&Close மற்றும் Apply பிறகு Close கொடுத்து விடவும். இப்பொழுது உங்கள் டிராயிங் ஏரியா வெண்மையாக மாறியிருக்கும்.



இப்பொழுது Command Window வில் wmfout என்ற கட்டளையை கொடுத்து என்டர் செய்து, கோப்பின் பெயரை கொடுத்து, பிறகு டிராயிங் ஏரியாவை தேர்வு செய்து என்டர் கொடுத்தால் போதுமானது.

WMF கோப்பு ரெடி! இனி இந்த கோப்பு எல்லா கணினியிலும் ஆட்டோ கேட் துணையின்றி திறக்கும்படியாக இருக்கும்.

மேலே குறிப்பிட்ட வழியை பின்பற்றி டிராயிங் ஏரியாவின் நிறத்தை பழையபடி கருப்பாக மாற்றிவிடவும்.

இந்த ஆட்டோ கேட் பற்றிய பதிவுகள் தொடர்ந்து இடலாம் என கருதுகிறேன். (வரவேற்பு இருந்தால்... உங்களுக்கு உபயோகமாக இருந்தால்)

31 comments:

  1. டிவிஎஸ்5018 June 2009 at 8:48 am

    நல்ல முயற்சி சூர்யகண்ணன். எனக்கு ஆட்டோகெட் தெரியாது. கற்று கொள்ள வசதியாக இருக்கும். //(வரவேற்பு இருந்தால்... உங்களுக்கு உபயோகமாக இருந்தால்)//குறிப்பிட்ட பகுதியை எடுத்து கொண்டு அதில் எழுதினால் வரவேற்பு குறைவாகத்தான் இருக்கும். மனம் சலிக்காமல் எழுதுங்கள்.நாளடைவில் உங்கள் இந்த பதிவுகளுக்கு என்று தனி வாசகர் வட்டம் உருவாகும்.

    ReplyDelete
  2. //இந்த ஆட்டோ கேட் பற்றிய பதிவுகள் தொடர்ந்து இடலாம் என கருதுகிறேன். (வரவேற்பு இருந்தால்... உங்களுக்கு உபயோகமாக இருந்தால்)//தொடர்ந்து எழுதுங்கள்,தெரிந்து கொள்ள ஆசை..

    ReplyDelete
  3. It is very useful. Thanks.write more.

    ReplyDelete
  4. அப்பாவி தமிழன்18 June 2009 at 8:14 pm

    நமக்கு இது பத்தி ஒன்னும் புரியல ஆனாலும் , படிச்சு தமிழ்10 ல ஓட்டும் போட்டாச்சு , அப்டியே நம்ம பதிவையும் கொஞ்சம் கண்டுக்கோங்க

    ReplyDelete
  5. சூர்யா ௧ண்ணன்18 June 2009 at 9:00 pm

    நன்றி டிவிஎஸ் 50. உங்கள் ஆலோசனைக்கு நன்றி!இந்த இதழ் தமிழ் கம்ப்யுட்டரில் எனது பதிவுகள் பிரசுரமாகியிருக்கின்றன,

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்18 June 2009 at 9:02 pm

    நன்றி அப்பாவி தமிழன்

    ReplyDelete
  7. சூர்யா ௧ண்ணன்18 June 2009 at 9:02 pm

    நன்றி திரு. மணிவண்ணன்

    ReplyDelete
  8. சூர்யா ௧ண்ணன்18 June 2009 at 9:02 pm

    நன்றி திருமதி. மேனகா சத்யா! நிச்சயமாக எழுதுகிறேன்,.

    ReplyDelete
  9. Informative & very much useful!!!!!!!!!!!!!!!!!!!keep going!!!!!!!!!!!!!senthil

    ReplyDelete
  10. Please tell me how to change the back ground to black.I installed Cad2010.its bg is whiteThanksSenthil34in@gmail.com

    ReplyDelete
  11. you are almost welcome mr. surya kannan. keep going

    ReplyDelete
  12. மாணவன்19 June 2009 at 4:37 am

    அவசியம் நீங்கள் எழுத வேண்டும்

    ReplyDelete
  13. சூர்யா ௧ண்ணன்19 June 2009 at 4:40 am

    Mr. Senthil..,CAD 2010.., on yourscreen in model space right-click, then click 'options", a pop-up table appears. Click to open "display" section. in 'window elements" section at top left side - click 'colors" button. then, for 'uniform background" choose 'black" as color.btw still wonder WHY for God's sake autodesk use white as default color for model space background. NEVER saw ANYBODY working in white background in model space!!!

    ReplyDelete
  14. Thanks alot.very use full tips for me.please continue to post like this tricks.thanks again----Rajeh,singapore

    ReplyDelete
  15. //இந்த ஆட்டோ கேட் பற்றிய பதிவுகள் தொடர்ந்து இடலாம் என கருதுகிறேன்// இந்த ஆட்டோ கேட் பற்றிய பதிவுகள் அடிப்படை இல் இருந்து தொடர்ந்து எழுதுங்கள்,தெரிந்து கொள்ள ஆசை.... உபயோகமாக இருக்கும். நன்றி.. நன்றி...

    ReplyDelete
  16. சந்திரா19 June 2009 at 9:27 am

    மிக அருமை. நான் ஒரு Quantity Surveyor. நான் ஆட்டோகாடை 10 வருடங்களாக உபயோகித்து வருகின்றேன். இது போல பயனுள்ள தகவல்கள் அறிய ஆசை. 3D பற்றியும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. சூர்யா ௧ண்ணன்19 June 2009 at 9:14 pm

    மணிவண்ணன்செந்தில் சுதாகர்மாணவன்ராஜேஷ் தாமஸ் ரூபன் சந்திராஅனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  18. மிக அருமை.அவசியம் நீங்கள் பதிவுகள் தொடர்ந்து எழுத வேண்டும்,3D பற்றியும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. Dear Mr, Surya,Your tips reg ACAD was very useful on the very first day itself for me for cnverting the dwg. Thanks a lotS.karthik

    ReplyDelete
  20. முரளிதரன்12 July 2009 at 1:43 am

    வணக்கம் நண்பரே,புது முயற்சி தான்.என் நெஞ்சார்ந்த நன்றிகள்.நானும் CAD உபயோகிக்கிரேன்இதை .pdf கோப்புகளாக மாற்றினால் Zoom in / Zoom out செய்யும் பொழுது படத்தின் தரம் குறையாமலும் இருக்கும்.உங்கள் செய்தி எனக்கு மிகவும் பயனுலதாக இருக்கிறது .நன்றி நண்பரே,

    ReplyDelete
  21. சூர்யா ௧ண்ணன்13 July 2009 at 5:50 am

    நன்றி முரளிதரன்!PDF கோப்பாக மாற்றுவதற்கு Adobe Acrobat Professional போன்ற மென்பொருட்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மேற்குறிப்பிட்ட முறையில் எதுவும் தேவையில்லை.

    ReplyDelete
  22. அன்பு சகோதரர் சூர்யகண்ணனுக்கு...Auto Cadல் ஒரு உதவி வேண்டி உங்களிடம் இந்த விண்ணப்பம்.என்னுடைய DWGS ஐ Read onlyshapeக்கு மாற்றவேண்டும். மற்றவர்கள்என்னுடைய dwg ஐ Open செய்யலாம்objectsஐ measure செய்யலாம், print எடுக்கலாம் ஆனா Edit மட்டும் பன்னக்கூடாது. மேலும் dwg ஐ திறக்கும் போதே அது read only தான் திறக்கப்படவேண்டும். அதை அவர்கள் எக்காரணம் கொண்டும் Full access ல திறக்ககூடாது. இவ்வாறாக எனது dwg அமைக்கப்படவேண்டும். இதற்கு தாங்களின் உதவி வேண்டும்.முக்கியமாக எனது dwg மற்றவர்களால் read onlyயில் தான் திறக்கப்படவேண்டும் [CD யில் உள்ளதைப்போல்]குறிப்பு:right click-properties-tic read only என்ற முறையில் வேண்டாம்.வேறு எதாவது வழி இருந்தால் சொல்லித்தந்து உதவுமாறூ கேட்டுக்கொள்கிறேன்.அன்புடன்ஆஷிக்

    ReplyDelete
  23. அன்பு சகோதரர் சூர்யகண்ணனுக்கு...Auto Cadல் ஒரு உதவி வேண்டி உங்களிடம் இந்த விண்ணப்பம்.என்னுடைய DWGS ஐ Read onlyshapeக்கு மாற்றவேண்டும். மற்றவர்கள்என்னுடைய dwg ஐ Open செய்யலாம்objectsஐ measure செய்யலாம், print எடுக்கலாம் ஆனா Edit மட்டும் பன்னக்கூடாது. மேலும் dwg ஐ திறக்கும் போதே அது read only தான் திறக்கப்படவேண்டும். அதை அவர்கள் எக்காரணம் கொண்டும் Full access ல திறக்ககூடாது. இவ்வாறாக எனது dwg அமைக்கப்படவேண்டும். இதற்கு தாங்களின் உதவி வேண்டும்.முக்கியமாக எனது dwg மற்றவர்களால் read onlyயில் தான் திறக்கப்படவேண்டும் [CD யில் உள்ளதைப்போல்]குறிப்பு:right click-properties-tic read only என்ற முறையில் வேண்டாம்.வேறு எதாவது வழி இருந்தால் சொல்லித்தந்து உதவுமாறூ கேட்டுக்கொள்கிறேன்.அன்புடன்ஆஷிக்

    ReplyDelete
  24. அன்பு சகோதரர் சூர்யகண்ணனுக்கு...Auto Cadல் ஒரு உதவி வேண்டி உங்களிடம் இந்த விண்ணப்பம்.என்னுடைய DWGS ஐ Read onlyshapeக்கு மாற்றவேண்டும். மற்றவர்கள்என்னுடைய dwg ஐ Open செய்யலாம்objectsஐ measure செய்யலாம், print எடுக்கலாம் ஆனா Edit மட்டும் பன்னக்கூடாது. மேலும் dwg ஐ திறக்கும் போதே அது read only தான் திறக்கப்படவேண்டும். அதை அவர்கள் எக்காரணம் கொண்டும் Full access ல திறக்ககூடாது. இவ்வாறாக எனது dwg அமைக்கப்படவேண்டும். இதற்கு தாங்களின் உதவி வேண்டும்.முக்கியமாக எனது dwg மற்றவர்களால் read onlyயில் தான் திறக்கப்படவேண்டும் [CD யில் உள்ளதைப்போல்]குறிப்பு:right click-properties-tic read only என்ற முறையில் வேண்டாம்.வேறு எதாவது வழி இருந்தால் சொல்லித்தந்து உதவுமாறூ கேட்டுக்கொள்கிறேன்.அன்புடன்ஆஷிக்

    ReplyDelete
  25. சூர்யா ௧ண்ணன்17 August 2009 at 7:50 am

    ஆஷிக் இந்த பதிவில் உங்களுக்கான பதில் உள்ளது.http://suryakannan.blogspot.com/2009/08/autocad.html

    ReplyDelete
  26. மிக்க நன்றி திரு கண்ணன், மிக உபயோகமான தகவல். நான் சில முறை PDF Converter இல்லாமல் tiff File ஆக தான் மாற்றி இருக்க்றேன். ஆனால் இது clearea இருக்கு. மேலும் இதில் Background colour மாற்றாமல் முயற்ச்சித்து பார்த்தேன் 2ம் ஒரே மாதிரி தான் இருக்கு

    ReplyDelete
  27. Thank U Surya Kannan. Keep Going

    ReplyDelete
  28. Hi Kannan this is very nice, you may please continue. This is very useful.

    ReplyDelete
  29. For changing into WMF format, its very useful to me. bcos i am a landscape designer in Dubai. i have to send mail to somebody my design. now i can easily convert to wmf format and sending it. Thanks my friend. Keep Publish more.

    ReplyDelete
  30. தொடர்ந்து எழுதுங்கள்,, CADT Software எங்கு கிடைக்கும். ஆட்டோ கேட் ஐ விட அதிக வசதியாக உள்ளது என்கிறார்கள்.m.sahulDubai+971504753730

    ReplyDelete
  31. ஹலோ சார் .உக்கள் பதிவை நான் தினமும் கவனிக்றேன் சார் .அப்பொழுது உங்களுடைய Auto cad பதிவை பார்தேன் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது .மிகவும் எளிமையாகவும் உள்ளது .தொடர்ந்து தாங்கள் பதிவை அளிக்கும் படி கேட்டுகொள்கிறேன் .நன்றி .

    ReplyDelete