1. திரைப்படங்களின் இறுதியில் வரும் ஸ்க்ரோலிங் கிரிடிட்ஸ் போல பவர்பாயிண்டில் டெக்ஸ்ட் அனிமேஷன்
டெக்ஸ்ட் பாக்ஸில் டெக்ஸ்டை டைப் செய்து கொள்ளுங்கள்.
அந்த டெக்ஸ்ட் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து 'Custom animation ' செல்லவும். அதில் Add Effect -> Entrance -> Fly in தேர்ந்தெடுக்கவும். ' Options' ல் உள்ள 'Speed ஃபீல்டில் Very Slow என்பதை தேர்வு செய்யவும்.
இப்பொழுது அந்த எஃபெக்ட் கீழே உள்ள கட்டத்தில் வந்திருக்கும். அதில் ரைட்கிளிக் செய்து Effect Options -> Text Animation -> Group Text -ல் 'One Object ' கொடுத்து விட்டு பிரிவ்யூ பாருங்கள்.
மறுபடியும் அதே டெக்ஸ்ட் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து 'Custom animation ' செல்லவும் அதில் Add Effect -> Exit -> Fly out தேர்ந்தெடுக்கவும். ' Options' ல் உள்ள 'Speed ஃபீல்டில் Very Slow என்பதையும், 'Direction' ஃபீல்டில் To Top என்பதையும் தேர்வு செய்யவும்.
கீழே உள்ள பிளே பொத்தானை அழுத்தி பார்க்கவும்..,
2. நீங்கள் எடிட் செய்து கொண்டிருக்கும் ஸ்லைடிலிருந்து ஸ்லைடு ஷோவை துவக்க..,
உங்கள் பிரசன்டேஷனில் 50 ஸ்லைடுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் 46 வது ஸ்லைடில் எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது ஸ்லைடு ஷோ கிளிக் செய்தால் முதலாவது ஸ்லைடிலிருந்துதான் ஸ்லைடு ஷோ துவங்கும். ஆனால் 46 வது ஸ்லைடிலிருந்து துவக்க Shift+F5 முயற்சித்துப் பாருங்கள்..,
3. சிறிய விண்டோவில் ஸ்லைடு ஷோ
வழக்கமாக ஸ்லைடு ஷோ முழு திரையில் வரும். சில சமயங்களில், இடையில் ஏதாவது ஸ்லைடில் எடிட் செய்ய வேண்டியிருந்தால், ஸ்லைடு ஷோவை நிறுத்தி (எஸ்கேப் கீயை மாங்கு, மாங்கென்று அடித்து) மறுபடி வரவேண்டும்.
இதற்கு மாற்று வழியாக 'Ctrl' யை பிடித்துக் கொண்டு இடது புறம் கீழே உள்ள ஸ்லைடு ஷோ பட்டனை கிளிக்கி பாருங்கள். ஒரு சிறிய விண்டோவில் ஸ்லைடு ஷோ வரும். மிகவும் எளிதாக ப்ரசன்டேஷனுக்கும், ஷோவுக்கும் மாறிக்கொள்ளலாம்.
இதற்கு மாற்று வழியாக 'Ctrl' யை பிடித்துக் கொண்டு இடது புறம் கீழே உள்ள ஸ்லைடு ஷோ பட்டனை கிளிக்கி பாருங்கள். ஒரு சிறிய விண்டோவில் ஸ்லைடு ஷோ வரும். மிகவும் எளிதாக ப்ரசன்டேஷனுக்கும், ஷோவுக்கும் மாறிக்கொள்ளலாம்.
ரொம்ப பயனுள்ள பவர்ஃபுல் பாயின்ட்ஸ் சூர்யா. நன்றி
ReplyDeleteநன்றி பாலா, உங்க பதிவும் ரொம்ப நல்லாயிருக்கு
ReplyDeleteClassic Touch
ReplyDelete