"Microsoft OneNote பயன்பாட்டை குறித்து இடுகை எழுதும் போதெல்லாம் தைரியமாக "தொடரும்.." போட்டு விடலாம் என தோன்றுகிறது. அந்த அளவிற்க்கு பல வசதிகளை உள்ளடக்கியது இந்த OneNote. ஏதாவது கணினி பயன்பாட்டில் ஒரு தேவை வரும்பொழுது, எதற்கும் OneNote -இல் முயற்சி செய்து பார்க்கலாமே, என தைரியமாக யோசிக்கலாம் என நினைக்கிறேன்!. "
என மைக்ரோசாப்ட் ஒன்நோட் பற்றிய எனது பழைய இடுகையில் ஒரு முறை நான் குறிப்பிட்டிருந்தேன். அது எந்த அளவிற்கு உண்மை என அதன் மேலதிக பயன்பாட்டை அறிந்துக் கொள்ளும்பொழுது உணர முடிகிறது.
உங்கள் அலுவலக காரியமாகவோ அல்லது தனிப்பட்ட வேலைக்காகவோ, ஏற்கனவே பிரின்ட் செய்யப்பட்ட ஒரு ஆவணத்தை மறுபடி தட்டச்சு செய்து, ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டியிருந்தால், அல்லது அந்த ஆவணம் ஏற்கனவே ஸ்கேன் செய்யப்பட்டு JPG/PDF வடிவில் இருந்தால், வேறு எந்த OCR மென்பொருளும் இல்லாமல், மைக்ரோசாப்ட் ஒன்நோட் மூலமாக எளிதாக டெக்ஸ்ட்டை மட்டும் பிரித்தெடுத்து வேர்டு போன்ற பயன்பாடுகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தேவையான ஆவணத்தை ஸ்கேன் செய்து JPG/PDF வடிவில் சேமித்துக் கொள்ளுங்கள்.
இனி வழக்கமாக பிரிண்ட் செய்வது போல, இந்த குறிப்பிட்ட கோப்பை பிரின்ட் செய்கையில் வழமையான பிண்டருக்கு பதிலாக Send to OneNote 2007/10 தேர்வு செய்து பிரின்ட் கொடுங்கள். இப்பொழுது அந்த கோப்பு படி எடுக்கப்பட்டு, ஒன்நோட்டில் திறக்கும். இப்பொழுது இதில் உள்ள படத்தின் மீது வலது க்ளிக் செய்து, திறக்கும் context menu வில் Copy Text from this Page of the Printout என்பதை சொடுக்குங்கள்.
இப்பொழுது டெக்ஸ்ட் பிரித்தெடுக்கப்படும்.
இனி வேர்டு தொகுப்பை திறந்து கொண்டு அங்கு பேஸ்ட் செய்திடுங்கள். இதில் ஒழுங்கமைப்பு மற்றும் வேறு மாறுதல்களை செய்து கொள்ளலாம்.
சற்று இடைவெளிக்கு பின் சூர்யகண்ணனை வலைப்பதிவுலகத்தில் மீண்டும் காண்பது பெரு மகிழ்வை அளிக்கிறது.
ReplyDeleteவாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
தேங்க்ஸ் சூர்யா. க்ராஃபிக்ஸ் இருந்தா சரி வராதில்லையா. டெக்ஸ்ட் மட்டும்தான் எடுக்க முடியுமில்ல?
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
pdf ஃபைலிலிருந்து டெக்ஸ்டை எப்படி பிரித்து எடுப்பதென குழம்பியிருந்தேன்.. தங்களது மைக்ரோசாஃப்ட் ஒன் நோட் பதிவு பயனுள்ளதாக அமைந்துள்ளது... நன்றி
ReplyDeleteமைக்ரோசாப்டின் மற்ற மென்பொருட்களை விட மிக அதிக வசதிகளை கொண்டது ஒன்நோட், நான் பதிவு எழுத இதைத்தான் பயன்படுத்துகிறேன்,படங்களை இணைப்பதில்தான் ப்ளாக்கருடன் சிறு கோளாறு ஏற்படுகிறது, ஆனால் நம் பதிவுகள் இதில் தானாக சேமிக்கப்படுவதால் ஒரு பேக்கபாக இதனை உபயோகிக்கலாம்
ReplyDeleteAfter long days happy to see ur blogs, its really fantastic.
ReplyDeleteBala murugan.
ரொம்ப நன்றிங்க
ReplyDeleteIt's so interesting that we can take some text from PDF and work on that
very very useful one. Thank u for sharing.
ReplyDeleteரெம்ப சந்தோசம் :)
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com