Friday, 14 January 2011

Google Chrome: இந்திய மொழிகளுக்கான பயனுள்ள நீட்சி!

சமீப காலமாக, தமிழ் உட்பட பல இந்திய மொழி வலைப்பக்கங்கள் யுனிகோட் வடிவமைப்பில் உருவாக்கப் பட்டிருந்தாலும், ஒரு சில வலைப்பக்கங்கள், யுனிகோட் அல்லாத பழைய எழுத்துருக்களை பயன்படுத்தியே உருவாக்கப்படுவதால், நமது உலாவிகளில் அந்த பக்கங்களை வாசிப்பதற்கு, அந்த குறிப்பிட்ட எழுத்துருவை ந்மது கணினியில் நிறுவியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 


இல்லையெனில் அவற்றை வாசிப்பது சாத்தியமற்று போகிறது. 


இந்த பிரச்சனைக்கு Google Chrome உலாவியில் (நெருப்புநரி உலாவிக்கும்) எளிதான,சரியான இலவச தீர்வாக அமைவது Padma Transformer for Indic Scripts  நீட்சியாகும். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த நீட்சியை தரவிறக்கி Google Chrome உலாவியில் நிறுவியபிறகு, இதற்கான அறிவிப்பு தோன்றுவதை கவனிக்கலாம்.


இனி அந்த வலைப்பக்கங்களை திறக்கையில், எழுத்துருக்களை நிறுவாமலேயே தெளிவாக வாசிக்க இயலும்.


எழுத்துருக்களை தரவிறக்க தேவையில்லை.



அனைவருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்! 


.

9 comments:

  1. மிகவும் உபயோகமான தகவல் சார்

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எனக்கும் இந்த தொல்லை இருந்தது சூர்யா ஆனால் ஒன்றும் செயாமல் விட்டுவிட்டேன். இப்பொது சரியாகிவிடும் என்று நம்புகிறேன். பகிர்வுக்கு நன்றி.

    என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றி மீண்டும் தலைவா:))

    ReplyDelete
  4. தலைவரே பத்மா சாப்ட்வேர் மிகவும் பயன் உள்ளது,தேடிகொண்டதை தந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. சூர்யா,
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    S.ரவிசங்கர்,திருச்சி.

    ReplyDelete
  6. நன்றி! நன்றி!!
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  7. நண்பரே சூர்யா,


    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete