Thursday, 25 November 2010

Windows Security: முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க

Anti Virus நிறுவப்படாத கணினி அல்லது முறையான உரிமம் இல்லாத Anti Virus மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ள கணினிகள், வைரஸ்/மால் வேர் தாக்குதல்களிலிருந்து தப்புவது மிகக் கடினமான விஷயமாகும். ஒரு சில சமயங்களில், உங்களது கணினி மிக மோசமான வைரஸ்/மால்வேர் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு, அதன் இயக்கும் முற்றிலும் முடக்கப் பட்டு, இயங்குதளம் கூட ஒழுங்காக பூட் ஆகாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். 



இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களது மிக முக்கியமான ஆவணங்கள், கோப்புகள் அந்த கணினியில் இருந்தால் இன்னும் டென்ஷன்தான். உங்கள் பாதிக்கப்பட்ட கணினியை சோதிக்கும் கணினி வல்லுனர், புதிதாக இயங்குதளத்தை நிறுவினால்தான் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். என்று சொல்லும் நிலை கூட வரலாம். 

இது போன்ற சமயங்களில் நமக்கு சமய சஞ்சீவியாக அமைவது Kaspersky நிறுவனத்தின் இலவச Bootable Kaspersky Rescue Disk.


இந்த பயனுள்ள கருவி, ISO இமேஜ் கோப்பாக தரவிறக்க Kaspersky தளத்திலேயே கிடைக்கிறது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரபட்டுள்ளது). இந்த ISO கோப்பை தரவிறக்கம் (வைரஸ்/மால்வேர் அல்லாத கணினியில்) செய்து கொண்டு, Nero Burning Rom போன்ற CD/DVD Burning Software ஐ பயன் படுத்தி இந்த ISO Image லிருந்து, CD ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த மென்பொருட்கள் இல்லாதவர்கள் இறுதியில் தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து ImgBurn மென்பொருளை தரவிறக்கி உபயோகித்துக் கொள்ளுங்கள்.


இப்படி உருவாக்கிய Kaspersky Rescue Disk ஐ பாதிக்கப்பட்ட கணினியில், First Boot Device ஐ Bios Settings இல் CD/DVD க்கு  மாற்றிவிட்டு, இந்த CD ஐ கொண்டு பூட் செய்யுங்கள். திரையில் Kaspersky Rescue Disk. Graphic Mode என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


பின்னர் இதில் தொடரும் விசார்டை பின் பற்றி உங்கள் வன்தட்டில் உள்ள வைரஸ்/மால்வேர்களை நீக்கி, உங்கள் கணினியை உயிர்ப்பிக்கலாம்.



இது போன்ற பிரச்சனைகள் உங்கள் கணினியில் இல்லாவிட்டாலும் கூட, இந்த Rescue CD ஐ உருவாக்கி வைத்துக் கொள்வது, ஆபத்து நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.




(இந்த ப்ளாக் 5 லட்சம் ஹிட்ஸ்களை நோக்கி... அனைவருக்கும் எனது பணிவான நன்றி)
.

18 comments:

  1. அருமை சார்,

    என்னைப்போன்ற வன்பொருள் துறையில் இருக்கும் பலருக்கும் இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    சிறப்பான மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. மிகப் பயனுள்ள தகவலை அளித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. நெருப்பு நரி அடிக்கடி க்ராஷ் ஆவதற்குக் காரணமும், தவிர்க்க முடியுமா என்பதையும் சொன்னால் உதவியாய் இருக்கும். நன்றி.

    ReplyDelete
  5. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் நீங்கள் மேற்சொல்லியிருக்கும் பிரச்சினை வந்து கணினியை ஃபோர்மட் செய்ய வேண்டியிருந்தது.
    இதனைத் தரவிறக்கிக் கொண்டேன். இனிமேல் இது பயனுள்ளதாக இருக்கும்.
    மிகவும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. திரு சூர்யா கண்ணன் அவர்களுக்கு வணக்கம் ,தங்கள் குறிப்பிட்டுள்ள தகவலுக்கு மிக்க நன்றி இதுமாதிரியான சிக்கல்களை அதிகம சந்திப்பதால் எனக்கு மிக உதவியாக இருக்கும் .
    தவிர என் நண்பர்கள் சிலர் மொபைல் போனில் தினம்தினம் அன்றைய பஞ்சாங்கம் பார்க்கிறார்கள் ,அது எப்படி ? அதற்க்கு ஏதாவது சாப்ட்வேர் உண்டா ? தெரிந்துகொள்ள விரும்பும் எனக்கு உதவ வேண்டுமாக கேட்டுக்கொள்கிறேன். S G ஸ்வாமிநாதன்

    ReplyDelete
  7. மிகவும் பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. //என் நண்பர்கள் சிலர் மொபைல் போனில் தினம்தினம் அன்றைய பஞ்சாங்கம் பார்க்கிறார்கள் ,அது எப்படி ? அதற்க்கு ஏதாவது சாப்ட்வேர் உண்டா ? தெரிந்துகொள்ள விரும்பும் எனக்கு உதவ வேண்டுமாக கேட்டுக்கொள்கிறேன். S G ஸ்வாமிநாதன்//

    ஐயா,

    உங்களுக்கான பதில்..
    You can get panchang on your mobile every day.
    Just follow these instructions:

    Subscribe to Sumadhwa Panchanga
    by sending sms to 9870807070 as ON SUMADHWASEVA

    You will get daily panchanga to your mobile absolutely free of cost

    ReplyDelete
  9. every day yours good message
    my first wishes i try that first time in message daily i wishes for you sir.,

    ReplyDelete
  10. ரொம்ப நன்றி கண்ணன் சார். இயக்கி பார்த்தேன். ரொம்ப உபயோகமான மென்பொருள்.

    ReplyDelete
  11. அன்பு நண்பரே, அனைத்து ஃபைல்களையும் பரிசோதித்த பின் user log on password கேட்கிறது.என்ன user name, password கொடுப்பது? விளக்கம் அளித்தால் உபயோகமாக இருக்கும்.நன்றி.

    ReplyDelete