Tuesday, 30 November 2010

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க

நாம் நமது கணினியின் வன் தட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட பார்ட்டிஷனில்,நமது முக்கியமான இரகசிய கோப்புகளை வைத்திருப்போம். உங்களைத் தவிர பிறரும் உபயோகிக்கும் கணினியில் உங்கள் இரகசியத்தை பாதுகாக்க ஒரு இலவச மென்பொருள் கருவி NoDrives Manager. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்ட பிறகு, இந்த கருவியை இயக்கி,


உங்கள் வன் தட்டில் உள்ள எந்த ட்ரைவை மறைக்க வேண்டுமோ, அந்த குறிப்பிட்ட ட்ரைவ் அல்லது, ட்ரைவ்களை தேர்வு செய்துகொண்டு, கீழே உள்ள Save Changes பொத்தானை அழுத்துங்கள்.


இதை செய்து முடித்த பிறகு  Exit the program பொத்தானை அழுத்தி விட்டு கணினியை Log off செய்து விட்டு மறுபடியும் வந்து பார்க்கையில் அந்த குறிப்பிட்ட ட்ரைவ் My Computer லிருந்து மறைக்கப்பட்டிருக்கும்.

மறுபடியும் அந்த குறிப்பிட்ட ட்ரைவை தோன்ற வைக்க இதே மென்பொருளை இயக்கி, குறிப்பிட்ட ட்ரைவிற்கு நேராக உள்ள டிக் மார்க்கை நீக்கிவிட்டு,  Exit the program பொத்தானை அழுத்தி விட்டு கணினியை Log off  செய்தால் போதுமானது.



 
.

Monday, 29 November 2010

Duplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க

நாம் நமது கணினியில் டாக்குமெண்டுகள், புகைப்படங்கள், MP3 பாடலகள், வீடியோ க்ளிப் போன்ற பலவகையான கோப்புகளை வைத்திருப்போம். பல சமயங்களில் ஒரே கோப்பு உங்கள் வன் தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ட்ரைவ் மற்றும் ஃபோல்டர்களில் இருப்பதுண்டு. இதனால் உங்கள் வன் தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதும் உண்டு. 


இந்த பிரச்சனையை தீர்க்க பல கட்டணம் செலுத்த வேண்டிய மென்பொருட்கள் இருந்தாலும், ஒரு இலவச மென்பொருள் Duplicate Cleaner. வெறும்  3 எம்பி அளவுள்ள மிகவும் பயனுள்ள கருவி!. உங்கள் கணினியில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இதன் Installation Wizard இல் Registry Reviver பகுதியில் Registry Cleaner தேவையில்லை என்றால், Do not Install Registry Reviver ஐ தேர்வு செய்து Install பொத்தானை அழுத்தி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

 

இந்த கருவியை இயக்கும் பொழுது, முதல் திரையில் எச்சரிக்கை செய்தியை வாசித்து, OK பொத்தானை அழுத்துங்கள்.


இப்பொழுது திறக்கும் Duplicate Cleaner திரையில், இடதுபுற பெட்டியில் தேவையான ட்ரைவ் மற்றும் கோப்புறைகளை தேர்வு செய்து அடுத்த பெட்டிக்கு ADD செய்து கொள்ளுங்கள்.


அடுத்து வலது புறமுள்ள File Search பகுதியில் உள்ள File Filter இல் கோப்பு வகையை கொடுங்கள் (Word கோப்பு எனில் *.DOC எனவும், படங்களுக்கு *.JPG.. )


பிறகு, கீழே உள்ள GO பொத்தானை அழுத்துங்கள். உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புகளின் அளவை பொறுத்து தேடும் வேகம் மாறுபடும்.


அடுத்த திரையில் தேடுதல் பணி முடிந்து விட்டதற்கான அறிவிப்பு வருவதை கவனிக்கலாம்.


இனி தேவையற்ற டூப்ளிகேட் கோப்புகளை கவனமாக தேர்வு செய்து கீழே உள்ள பொத்தான்களில் தேவையானதை க்ளிக் செய்து, டூப்ளிகேட் கோப்புகளை உங்கள் கணினியிலிருந்து நீக்கி, உங்கள் வன் தட்டினை பராமரிக்கலாம்.





.

Sunday, 28 November 2010

Google Chrome: Gmail க்கான பயனுள்ள நீட்சி!

வழக்கமாக நமது gmail திரையில், விளம்பரங்கள், லிங்க்குகள் போன்றவைகள் வலது புறத்தில் இருக்கும்.

கீழே உங்கள் ஜிமெயில்  கணக்கை குறித்த விவரங்கள் இருக்கும்.


மேலும் Chat போன்ற விவரங்கள் இடது புறத்தில் இருப்பதை பார்த்திருக்கிறோம். Google Chrome உலாவியில், இவற்றை நீக்கி, சுத்தமான ஜிமெயில் திரையை கொண்டு வரவும் மேலும் பலவசதிகளை பெறவும் Better Gmail எனும் நீட்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த நீட்சியை தரவிறக்கி உங்கள் க்ரோம் உலாவியில் நிறுவியபிறகு, முதல் Better Gmail திரையில் தேவையான வசதிகளை தேர்வு செய்து Save பொத்தானை அழுத்துங்கள்.


இனி உங்கள் ஜிமெயில் திரை விளம்பரங்கள், லிங்க்குகள் நீக்கப்பட்டு, தெளிவாக இருப்பதை பார்க்கலாம்.



மேலும், நாம் உலாவும் பல வலைப்பக்கங்களில் உள்ள Mailto லிங்க்கை க்ளிக் செய்தவுடன் அவுட்லுக் தான் வழமையாக திறக்கும். ஆனால் இந்த நீட்சியில் உள்ள Handle e-mail (mailto) links with Gmail வசதியை தேர்வு செய்தால், இதற்குமேல் Mailto லிங்க்குகளை க்ளிக் செய்தால் ஜிமெயிலில் திறக்கும்.

 .

Saturday, 27 November 2010

PenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க

இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அனைத்து பயனாளர்களும் தனக்கென்று PenDrive வைத்திருக்கிறார்கள். உங்களது பென் ட்ரைவில் உங்கள் அலுவல் சம்பந்தமான கோப்புகள், கோப்புறைகள் மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் வைத்திருப்பீர்கள். 


ஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல் உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பார்க்ககூடாத புகைப்படங்களை அவர் பார்த்துவிடும் சூழ்நிலையும் வரலாம்.

இது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க ஒரு  இலவச மென்பொருள் கருவி WinMend Folder Hidden எனும் சிறிய சக்திவாய்ந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

இந்த மென்பொருள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்ரைவில் Hide  செய்த கோப்புகளை, பிற கணினிகளிலும், குறிப்பாக விண்டோஸ் தவிர வேறு இயங்கு தளங்களிலும் கூட திறக்க இயலாது என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் பென் ட்ரைவ் மட்டுமின்றி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புறைகளையும் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலும்.


இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி, முதல் முறையாக அதனை இயக்கும் பொழுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுங்கள்.





அடுத்து திறக்கும் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திரையில்,Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உங்கள் பென் ட்ரைவிலிருந்து அல்லது உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் இந்த விண்டோவை மூடிவிடலாம். இனி நீங்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுமின்றி வேறு எந்த கணினியிலும் பார்க்க இயலாது. மறுபடியும், Unhide செய்ய இதே மென்பொருளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,



தேவையான கோப்புறைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாம்.




.

Google Chrome: Reading Glass - பயனுள்ள நீட்சி!

நாம் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு சில வலைப்பக்கங்கள் பல விளம்பரங்கள், பிற தகவலகள் என பலதும் கலந்த கலவையாக இருக்கும். அவற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசிக்க வேண்டுமெனில், அருகிலுள்ள கலர் கலரான பிற விளம்பரங்கள், படங்கள், பிற செய்திகள் நமக்கு எரிச்சலை தரும் விஷயமாக இருப்பதுண்டு.


இது போன்ற சமயங்களில் நமக்கு பெரும் துணையாக இருப்பது Google Chrome உலாவிக்கான Reading Glasses நீட்சி! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).


Install பொத்தானை அழுத்தி உங்கள் கூகுள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, இது நிறுவப்பட்டதற்கான அறிவிப்பு வலது மேற்புற மூலையில் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.

இனி உங்களுக்கு தேவையான வலைப்பக்கங்களை திறந்து கொண்டு வாசிக்கிறீர்கள். உதாரணமாக..


இந்த பக்கத்தில் தலையங்கத்தை மட்டும் வாசிக்க வேண்டும் எனில், அதிலுள்ள டெக்ஸ்டின் ஏதேனும் ஒரு பகுதியை தேர்வு செய்து, வலது மேற்புற டூல்பாரில் உள்ள மூக்கு கண்ணாடி ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.


நமக்கு தேவையான டெக்ஸ்ட்டை தவிர மற்றதனைத்தும் fade ஆகி, நாம் படிக்கும்பொழுது ஏற்படும் அலுப்பை தவிர்க்கிறது. மறுபடியும் பழையபடி மாற்ற, அதே ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.




.

Friday, 26 November 2010

பதிவர்களுக்கும், தீவிர வாசகர்களுக்கும் மிக பயனுள்ள மென்பொருள்

ஒவ்வொரு முறையும் நமது விருப்பமான பதிவர்களின் இடுகைகளை, ஏதேனும் ஒரு உலாவியில் Google Reader மூலமாக தொடர்ந்து படித்து வருகிறோம். (இது  சம்பந்தப்பட்ட எனது மற்றொரு இடுகையை பாருங்கள் Google Chrome: பதிவர்களுக்கான பயனுள்ள நீட்சி! ) இந்த Google Reader ஐ உலாவியின் துணையின்றி நேரடியாக உங்கள் Desktop இல் படிக்கவும், புதிதாக வரும் இடுகைகளுக்கான அறிவிப்பையும் நீங்கள் கணினியில் வேறு பணியில் இருக்கும் பொழுது பெற, மிக அருமையான இலவச மென்பொருள் Desktop Google Reader ஆகும். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)




இந்த மென்பொருள் கருவி உங்கள் கணினியில் நிறுவுவதற்கு முன்பாக .NET framework 3.5 SP1 நிறுப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லையெனில் மேலே உள்ள லிங்கை க்ளிக் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். முதல் முறை துவங்கும் பொழுது உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவு சொல்லை கொடுத்து Login பொத்தானை அழுத்துங்கள்.



இனி உங்கள் அபிமான இடுகைகளை உலாவியின் துணையின்றி, உங்கள் டெஸ்க்டாப்பில் படித்து மகிழலாம்.


மேலும் இதன் இடது புற பேனில் உள்ள டூல்ஸ் ஐகானை அழுத்தி, தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.


அது மட்டுமின்றி வலது புற பேனில், இடுகையை திறந்த பிறகு, அதை மற்றவர்களுடன் Facebook, Twitter போன்ற சமூக இணையத்தில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.



இந்த கருவியை மினிமைஸ் செய்து சிஸ்டம் ட்ரேயில் வைத்துக் கொள்ளும்பொழுது, அவ்வப்பொழுது வரும் அப்டேட்களை உங்கள் டெஸ்க்டாப்பில் பாப் அப் திரையில் அறிவிக்கும் வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


பின்னூட்டம் வசதி மட்டும் இல்லையென்று கருதுகிறேன்..
 

.

Thursday, 25 November 2010

Facebook: உலாவியின்றி Desktop - இல் Chat செய்ய

Facebook சமூக இணையதளத்தில் Chat செய்வதற்கு நாம் ஏதேனும் ஒரு உலாவியில் ( Browser) Facebook தளத்திற்குள் நுழைந்த பின்னரே Chat செய்யும் வசதி உண்டு. அப்படி இல்லாமல் Yahoo messenger / Gtalk / MSN Messenger போன்று Browser இல்லாமல், Desktop இல் chat செய்யும் படி உருவாக்கப் பட்டுள்ள ChitChat for Facebook எனும் இலவச மென்பொருள் கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த மென்பொருள் கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொள்ளும் பொழுது, Installation Wizard இல் Install Auto Complete Pro எனும் வசதியை வேண்டாமென்றால் அதனை நீக்கி விடுங்கள்.


நிறுவி முடித்த பிறகு, உங்கள் Facebook பயனர் கணக்கில் லாகின் செய்து கொள்ளுங்கள்.


இனி  Yahoo messenger / Gtalk / MSN Messenger போன்று உலாவியின்றி, டெஸ்க்டாபில் Chat செய்ய முடியும்.


இதில் ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்களுடன் chat செய்யும் பொழுது, ஒவ்வொரு Chat திரையையும் ஒவ்வொரு டேபில் திறந்து கொள்ளும் வசதி இதில் உண்டு. இந்த இடுகை எழுதும் பொழுது, எந்த நண்பர்களும் ஆன்லைனில் இல்லாத காரணத்தினால், கீழே உள்ள படத்தை கூகுள் இமேஜஸ் லிருந்து சுட்டது.





.

Windows Security: முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க

Anti Virus நிறுவப்படாத கணினி அல்லது முறையான உரிமம் இல்லாத Anti Virus மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ள கணினிகள், வைரஸ்/மால் வேர் தாக்குதல்களிலிருந்து தப்புவது மிகக் கடினமான விஷயமாகும். ஒரு சில சமயங்களில், உங்களது கணினி மிக மோசமான வைரஸ்/மால்வேர் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு, அதன் இயக்கும் முற்றிலும் முடக்கப் பட்டு, இயங்குதளம் கூட ஒழுங்காக பூட் ஆகாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். 



இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களது மிக முக்கியமான ஆவணங்கள், கோப்புகள் அந்த கணினியில் இருந்தால் இன்னும் டென்ஷன்தான். உங்கள் பாதிக்கப்பட்ட கணினியை சோதிக்கும் கணினி வல்லுனர், புதிதாக இயங்குதளத்தை நிறுவினால்தான் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். என்று சொல்லும் நிலை கூட வரலாம். 

இது போன்ற சமயங்களில் நமக்கு சமய சஞ்சீவியாக அமைவது Kaspersky நிறுவனத்தின் இலவச Bootable Kaspersky Rescue Disk.


இந்த பயனுள்ள கருவி, ISO இமேஜ் கோப்பாக தரவிறக்க Kaspersky தளத்திலேயே கிடைக்கிறது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரபட்டுள்ளது). இந்த ISO கோப்பை தரவிறக்கம் (வைரஸ்/மால்வேர் அல்லாத கணினியில்) செய்து கொண்டு, Nero Burning Rom போன்ற CD/DVD Burning Software ஐ பயன் படுத்தி இந்த ISO Image லிருந்து, CD ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த மென்பொருட்கள் இல்லாதவர்கள் இறுதியில் தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து ImgBurn மென்பொருளை தரவிறக்கி உபயோகித்துக் கொள்ளுங்கள்.


இப்படி உருவாக்கிய Kaspersky Rescue Disk ஐ பாதிக்கப்பட்ட கணினியில், First Boot Device ஐ Bios Settings இல் CD/DVD க்கு  மாற்றிவிட்டு, இந்த CD ஐ கொண்டு பூட் செய்யுங்கள். திரையில் Kaspersky Rescue Disk. Graphic Mode என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


பின்னர் இதில் தொடரும் விசார்டை பின் பற்றி உங்கள் வன்தட்டில் உள்ள வைரஸ்/மால்வேர்களை நீக்கி, உங்கள் கணினியை உயிர்ப்பிக்கலாம்.



இது போன்ற பிரச்சனைகள் உங்கள் கணினியில் இல்லாவிட்டாலும் கூட, இந்த Rescue CD ஐ உருவாக்கி வைத்துக் கொள்வது, ஆபத்து நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.




(இந்த ப்ளாக் 5 லட்சம் ஹிட்ஸ்களை நோக்கி... அனைவருக்கும் எனது பணிவான நன்றி)
.

Wednesday, 24 November 2010

Facebook: உரையாடலை ரெக்கார்டு செய்வது எப்படி?

Facebook சமூக வலைப்பின்னல் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. Facebook இல் நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் chat செய்யும் பொழுது, அந்த முழு உரையாடலையும், ஆவணபடுத்த விரும்பி அவற்றை Record செய்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் உபயோகிக்க நெருப்பு நரி (FireFox) உலாவியில் Facebook Chat History Manager எனும் நீட்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 



(231,784 பயனாளர்கள் உபயோகிக்கும் இந்த நீட்சியின் தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த நீட்சியை தரவிறக்கி உங்கள் நெருப்பு நரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, முதலாவதாக செய்ய வேண்டியது.. Tools menu விற்கு சென்று Facebook Chat Manager மற்றும் Get Facebook ID ஐ க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் வசன பெட்டியில் Facebook -இல் லாகின் செய்து, Allow என்ற பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து உங்கள் Facebook இன் ID ஒரு வசனப் பெட்டியில் தோன்றும், இதனை தேர்வு செய்து காப்பி செய்து கொள்ளுங்கள்.



மறுபடியும் Tools - Facbook Chat Manager - Create Account க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து திறக்கும் வசனப் பெட்டியில், ஏற்கனவே காப்பி செய்து வைத்திருக்கும் Facebook ID ஐ பேஸ்ட் செய்து, உங்களுக்கான பயனர் கணக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.



இனி Facebook இல் உங்கள் உரையாடல்கள் (Chat) அனைத்தும் பதிவு செய்யப்படும். இனி பிறகு உங்களுக்கு இந்த உரையாடல்கள் தேவைப்படும் பொழுது, Tools - Facebook Chat Manager -View History க்ளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது Ctrl+Alt+F கீகளை அழுத்துவதன் மூலமாகவோ, சேமிக்கப்பட்ட அனைத்து உரையாடல்களையும் பட்டியலில் காண முடியும்.