Monday, 11 October 2010

EXCEL - Duplicate Remover அட்டகாசமான இலவச நீட்சி!

நாம் மைக்ரோசாப்ட் Excel பயன்பாட்டினை உபயோகித்து  பெரிய Worksheetகளை உருவாக்கும் பொழுது,  சில சமயங்களில் duplicate என்ட்ரிகள் வருவதை தவிர்க்க இயலாது. 1000 க்கும் மேற்பட்ட டேட்டாகளை கையாளும் பொழுது, இவ்வாறு வரும்  Duplicate Entry களை கண்டறிவது, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் ஒரு காரியமாகும். 

இந்த வேலையை உங்களுக்கு எளிதாக்க பல மென்பொருள் கருவிகள் இருந்தாலும் அவை விலை கொடுத்து வாங்க வேண்டிய (குறைந்த பட்சம் 30 டாலர்கள்) சூழ்நிலை உள்ளது. இதோ உங்களுக்காக ஒரு இலவச மென்பொருள் நீட்சி! DuplicatesRemover v2.0 (தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்). 


இதை நிறுவிக் கொண்ட பிறகு Excel ஐ திறந்து பார்த்தால், Add-Ins ரிப்பன் மெனுவில் இந்த புதிய நீட்சிக்கான பட்டன் வந்திருப்பதை காணலாம். 


இப்பொழுது Duplicate ஐ கண்டறிவதற்கான எச்செல் கோப்பை திறந்து கொள்ளுங்கள். 


Duplicates Remover பொத்தானை அழுத்தவும். இப்பொழுது திறக்கும் வசனப் பெட்டியில், எந்த Column த்தில் உள்ள டேட்டாக்களில் Duplicate entry களை கண்டறிய வேண்டுமோ, அந்த column ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒரே சமயத்தில் பல Column களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.  


உதாரணமாக Column B , தேர்வு செய்து அடுத்துள்ள Action பகுதியில் Delete Duplicates / Highlight Duplicates / sort data and highlight duplicates / move to bottom and highlight duplicates / examine for duplicates போன்ற வசதிகளில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து கொள்ளுங்கள். 


அடுத்துள்ள Comparing Options பகுதியில் case sensitive / Trim White space ஆகிய வசதிகளில் உங்களுக்கு தேவையான வசதிகளை தேர்வு செய்து கொண்டு, 



Start பொத்தானை அழுத்துங்கள்! அவ்வளவுதான்! நொடிகளில் உங்கள் கோப்பிலுள்ள Duplicate களை கண்டறிந்து தேவையை பூர்த்தி செய்கிறது. 


DuplicatesRemover தரவிறக்க! 

.


         

11 comments:

  1. மிகவும் பயனுள்ள நீட்சி..! தங்களது விளக்கமும் மிக அருமை..!! பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு நண்பா

    ReplyDelete
  3. இதே வசதி excel 2007 data menuvukku கீழ் remove duplicate என்ற பட்டன் மூலமவகவும் கிடைக்கும்... just want to share the things :).
    தல.. இது தான் உங்க blogla நான் poodura பிரஸ்ட் கமெண்ட் . ரொம்ப நாலா follow பண்றேன் இருந்தாலும்..

    ReplyDelete
  4. ரொம்ப ரிஸ்கி இல்லை சூர்யா? ஒரே மாதிரி ரெண்டு பேர் இருக்கலாம், நம்பர் இருக்கலாம். காம்பினேடட் கம்பேரிசன் இருக்கணும்.

    ReplyDelete
  5. பாராட்ட வார்த்தையே இல்லீங்ண்ணா

    மிக்க மிக்க நன்றிங்கோ

    ReplyDelete
  6. ரொம்ப ரொம் நன்றி சூர்யா. அட்டகாசமானதொரு நீட்சி.

    கீப் இட் அப்.

    நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  7. நல்ல விளக்கம் .பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  8. அதெல்லாம் சரி... டூப்ளிகேட் -னா என்னாங்கண்ணா?.. நெஜமாலுமே கேக்கறேன்.

    ReplyDelete
  9. எக்சல் 2007ல் உள்ள duplicate Removerக்கும் இதற்கும் ஏதேனும் வித்யாசமுள்ளதா?

    ReplyDelete
  10. பயனுள்ள தகவல், நன்றி சூர்யா கண்ணன்.

    ReplyDelete
  11. Excel 2007 -ல் உள்ளிணைந்துள்ள Duplicate Remover - Duplicate களை நீக்க மட்டுமே செய்யும்.. இந்த கருவியில் அதைவிட அதிக வசதிகள் உள்ளன.

    ReplyDelete