Friday, 17 September 2010

க்ரோம்: பயனுள்ள யூ டியுப் நீட்சி! - எந்திரன்

வழக்கமாக நாம் க்ரோம் உலாவியில் யூ டியுப் தளத்தில் காணொளிகளை காணும் பொழுது, திரையில் அந்த வீடியோ மற்றும் அது சம்பந்தப்பட்ட பிற லிங்குகள், வசதிகள் தோன்றும்.  நாம் அந்த வசதிகளை காண மேலும் கீழுமாக உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, காணொளியையும் திரையில் தோன்றியிருக்கும் படியும், அதுவும் வழக்கமாக உள்ளது போலன்றி, அதைவிட பெரிதாகவும், திரையில் நம் வசதிக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளும் வகையிலும் அமைந்துள்ள ஒரு அருமையான நீட்சி! VidzBigger!
தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. அந்த லிங்கில் சென்று, Install பட்டனை க்ளிக் செய்து க்ரோம் உலாவியில் நிறுவிக்கொள்ளுங்கள். 


இதனை நிறுவியபிறகு, க்ரோம் உலாவியில், இது நிறுவப்பட்ட செய்தி தோன்றும். 
நாம் வழக்கமாக யூ டியூப் தளத்தில் படங்களை காணும் பொழுது கீழே உள்ளது போல தோன்றும். 


இந்த நீட்சியை நிறுவிய பிறகு, (ஐஸ்வர்யாவின் முத்தத்திற்கும் இந்த நீட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை)


திரையில் விரவியிருந்த பல ஆப்ஷன்கள் அனைத்தும் வலது புற பேனில், வரிசையாக மாற்றியமைக்கப்படும் என்பதோடல்லாமல், நாம் அந்த பக்கத்தில் ஸ்க்ரோல் செய்யும் பொழுது வலதுபுற பேன் மட்டுமே ஸ்க்ரோல் ஆகும் என்பதால், திரையில் படம் அது பாட்டிற்கு ஓடிக் கொண்டிருக்கும். 


மேலும் க்ரோம் உலாவியின் வலது மேல் புறத்தில் உள்ள இந்த நீட்சியின் ஐகானை க்ளிக் செய்து, Video Preferences பொத்தானை அழுத்தி, பின்னர் திறக்கும் பல வசதிகளில், நமக்கு தேவையான வசதிகளை சேர்க்கவும், நீக்கவும் செய்து யூ டியூப் தளத்தில் காணொளிகளை கண்டுகளிக்கலாம்.   




.

3 comments:

  1. இந்த நீட்சியை நிறுவிய பிறகு, (ஐஸ்வர்யாவின் முத்தத்திற்கும் இந்த நீட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை) //


    ஹாஹாஹா .. நல்ல பகிர்வு சூர்யா..

    ReplyDelete