நமது விண்டோஸ் இயங்குதளங்களில், தேவையான ஃபோல்டர்களை திறந்து அதிலுள்ள கோப்புகளின் விவரங்களை Details view வில் பார்க்கும் பொழுது, அல்லது Search சென்று ஏதாவது ஒரு குறிப்பிட்ட கோப்புகளை தேடும் பொழுது, விண்டோஸ் explorer திரையில் Name, In Folder, Size, Type மற்றும் Date modified போன்ற Column களில் தேவையான விவரங்களை காண முடியும்.
ஆனால் இந்த column களின் அளவு மாறுபடுவதால் அந்த குறிப்பிட்ட column த்தில் உள்ள விவரங்கள் அடுத்துள்ள column த்தால் சிறிதாக்கப் பட்டுள்ளதை அறியலாம். இதனால் கோப்புகளின் பெயர் அல்லது ஃபோல்டரின் விவரங்களை முழுமையாக பார்ப்பது சற்று சிரமமாக உள்ளது. வழக்கமாக நாம் இது போன்ற column களின் இடையே உள்ள பிரிவில் க்ளிக் செய்து டிராக் செய்து விவரங்கள் முழுமையாக தெரியும்படி பெரிதாக்கி கொள்கிறோம்.
இப்படி ஒவ்வொரு column த்தையும் அளவு மாற்றிக் கொண்டிருப்பதை விட, ஒரு அருமையான ஷார்ட் கட் உள்ளது. உங்கள் கீ போர்டில் Ctrl மற்றும் Number pad உள்ள + பொத்தான்களை ஒரு சேர அழுத்தவும்.
இப்பொழுது column கள் ஒவ்வொன்றும் அதிலுள்ள விரங்கள் முழுமையாக தெரியும்படி தானாகவே அளவை மாற்றிக்கொள்ளும்.
இதற்கெல்லாம் ஒரு இடுகையா? என்று கேட்பவர்கள், ஓட்டு போட்டு விட்டு பின்னூட்டத்தில் கேட்கலாம்.
.
நல்ல பயனுள்ள தகவல்....
ReplyDeletekandupidippu :p
ReplyDeleteஇதுக்குதான் இடுகை:) நன்றி சூர்யா.
ReplyDeleteThanks Sir, How to use it laptop
ReplyDeleteuseful tip!
ReplyDeleteI was looking for this shortcut for a long time. Thanks Nanba...
ReplyDeleteKrishna
விண்டோஸ் xp ஃபுல் ஷ்கிரீன் ஒபென் ஆக மறுக்கிறது,ரீ இன்ஸ்டால் செய்தும் ஒபென் ஆகவில்லை.முடிந்தால் விளக்கவும். நன்றி.
ReplyDeleteவழக்கம் போல் எளிமையான விளக்கத்துடன் பயனுள்ள தகவல்.
ReplyDeleteஉடனே செய்து பார்த்துவிட்டேன். நன்றி.
ReplyDeleteஎல்லாத்திற்கும் தான் இடுக்கை போடனும்
ReplyDeleteஇல்லாட்டி எப்படி தெரிந்து கொள்வது