Google, Yahoo போல Bing தேடுபொறியும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேடுபொறியில், முதல் பார்வையிலேயே அனைவரையும் கவர்வது இதன் பின்புலத்தில் உள்ள அழகான படங்கள்தான்.
இது போன்ற படங்களை நமது கணினியில் தரவிறக்கி கொண்டால், பிறகு இதை சுவர் தாளாகவோ, அல்லது மற்ற உபயோகத்திற்கோ வைத்துக் கொள்ளலாம் என பலரும் யோசித்திருப்பார்கள். ஆனால் இதை மற்ற தளங்களில் உள்ளது போல, வலது க்ளிக் செய்து சேமிக்க முடியாது. இதற்காக ஒரு சில கருவிகள் பயன்படுகின்றன. ஆனால் இவற்றில் எதையும் பயன்படுத்தாமல், இந்த படங்களை நெருப்பு நரி உலாவியில் எப்படி சேமிப்பது என்பதை பார்க்கலாம்.
முதலில் உங்கள் நெருப்பு நரி உலாவியில் Bing தளத்திற்கு செல்லுங்கள். தளம் முழுவதுமாக திறந்த பிறகு, Tools க்ளிக் செய்து Page Info செல்லுங்கள்.
இப்போது திறக்கும் விண்டோவில் Media tab ஐ க்ளிக் செய்து, சரியான Bing பின்புல படத்தின் கோப்பை தேர்வு செய்து, கீழே உள்ள Save as பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.
இனி எங்கு சேமிக்க வேண்டும் என்பதை கொடுத்துவிட்டால் போதுமானது. அவ்வளவுதான்.
super idea :) thanks
ReplyDeleteநன்றிங்க ஜமால்!
ReplyDeleteஎன் வலை பக்கம் வந்து திறக்கும் வேகத்தை அதிகரிக்க உதவியதற்கு மிக்க நன்றி சூர்யா மாஸ்டர் :)
ReplyDeleteசெய்து பார்கிறோம் தல...
ReplyDeleteநன்றி சூர்யா மாஸ்டர்:)
ReplyDelete//வானம்பாடிகள் said...
ReplyDeleteநன்றி சூர்யா மாஸ்டர்:)//
தலைவா.. அதென்ன குங்பூ மாஸ்டர் மாதிரி..
thanks
ReplyDeletesuper information
ReplyDeleteஇதே வழிமுறையை flickr இல் படங்களை சேமிக்கும் போது spaceball என பெயர்வந்து சேமிக்கத் தடையாக இருந்தால் பின்பற்றவும்.
ReplyDeleteஏற்கனவே எந்த கருவியோ மென்பொருளோ இல்லாமல்,IE8-ல் ரைட் க்ளிக் செய்து save background as சொடுக்கி பல படங்கள் சேகரித்துள்ளேன். ஒருவேளை ”நெருப்புநரி”க்கான குறிப்பு எனில் தங்கள் விளக்கம் அருமை.எதற்கும் மற்ற தேடுபொறிகளில் எப்படி உள்ளது எனப் பார்த்துவிட்டு பதிவிடுவது உங்கள் மேல் நாங்கள் கொண்ட நம்பிக்கையை இன்னும் உயர்த்துவதாக அமையும்.(சுட்டியது தவறு எனில்,மன்னிக்கவும்)
ReplyDelete//வானவன் யோகி said...
ReplyDeleteஏற்கனவே எந்த கருவியோ மென்பொருளோ இல்லாமல்,IE8-ல் ரைட் க்ளிக் செய்து save background as சொடுக்கி பல படங்கள் சேகரித்துள்ளேன். ஒருவேளை ”நெருப்புநரி”க்கான குறிப்பு எனில் தங்கள் விளக்கம் அருமை.எதற்கும் மற்ற தேடுபொறிகளில் எப்படி உள்ளது எனப் பார்த்துவிட்டு பதிவிடுவது உங்கள் மேல் நாங்கள் கொண்ட நம்பிக்கையை இன்னும் உயர்த்துவதாக அமையும்.(சுட்டியது தவறு எனில்,மன்னிக்கவும்)//
சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே!.. நான் IE உபயோகிப்பதில்லை..
//சூர்யா ௧ண்ணன் said.... நான் IE உபயோகிப்பதில்லை..//
ReplyDeleteஹாஹா