விண்டோஸ் இயங்குதளத்தில் நாம் பணிபுரியும் பொழுது, திறக்கும் விண்டோக்கள் சிறியதாக இருந்தால், Maximize செய்தோ அல்லது அந்த விண்டோவின் வலது கீழ் பார்டரை இழுத்தோ சில சமயங்களில் நமக்கு தேவையான அளவிற்கு Resize செய்து கொள்கிறோம். ஆனால் ஒரு சில விண்டோக்கள் இப்படி Resize செய்ய முடியாத வகையில் அமைக்கப் பட்டிருப்பதை கவனிக்கலாம். Maximize பட்டனும் disable ஆகியிருக்கும்.
இப்படிப்பட்ட பெரும்பாலான விண்டோக்களை கொஞ்சம் பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ முடிந்தால் நன்றாக இருக்குமே என்று சிந்திப்பவர்களுக்காக.. ResizeEnable எனும் ஒரு சிறிய பயனுள்ள கருவி. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இது ஒரு ZIP கோப்பாக உள்ளது. இதனை Extract செய்து, இதிலுள்ள 3 கோப்புகளை, வேண்டிய பகுதியில் ஒரு ஃபோல்டரில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதிலுள்ள ResizeEnableRunner.exe என்ற கோப்பை இயக்கினால் போதுமானது என்பதால் இதற்கான ஒரு ஷார்ட்கட்டை உருவாக்கி வைத்துக் கொள்ளலாம்.
இந்த கருவியை பயன்படுத்தி பெரும்பாலான விண்டோக்களை நம் விருப்பத்திற்கு ஏற்றபடி பெரியதாகவோ, சிறியதாகவோ மாற்றிக்கொள்ள இயலும்.
.
No comments:
Post a Comment