Google Buzz ஐ பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இதில் நமக்கு எவரெல்லாம் Followers ஆக இருக்கிறார்கள் என்பதும், நாம் யாரையெல்லாம் follow செய்கிறோம் என்பதையும், நம்முடைய பெயர் லிங்கை க்ளிக் செய்தாலே மற்றவர் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
இப்படி நாம் யாரை follow செய்கிறோம் என்பதும், நம்மை யார் follow செய்கிறார்கள் என்பதும் மற்றவர் ஏன் அறிய வேண்டும்?
உங்கள் ஜிமெயில் கணக்கில் Edit your profile பக்கத்திற்கு செல்லுங்கள்.
இங்கு About me டேபில் Display the list of people I'm following and people following me என்பதற்கு நேராக உள்ள டிக் மார்க்கை எடுத்து விட்டு, அந்த பக்கத்தின் இறுதில் உள்ள Save Changes பொத்தானை அழுத்துங்கள்.
இனி Followers பற்றிய விவரங்களை மற்றவர்கள் அறிய முடியாது.
.
No comments:
Post a Comment