பெரும்பாலும் VLC Media Player சமிபகாலமாக அனைவராலும் பயன்படுத்தப் பட்டு வருகின்ற ஒரு மீடியா பிளேயர். இது இலவசம் மற்றும் விண்டோஸ் லினக்ஸ் போன்ற இயங்குதளங்களிலும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது இதன் சிறப்பம்சம். இந்த மென்பொருளை ஒரு ப்ளேயராக மட்டும் பயன் படுத்தி வருபவர்கள் பலர். ஆனால் இதில் ஒரு சாதாரண பிளேயர் என்பதையும் தாண்டி பல வசதிகள் உள்ளிணைக்கப் பட்டுள்ளன. இது குறித்து ஏற்கனவே சில இடுகைகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.
நாம் ஒரு திரைப்படத்தை VLC ப்ளேயரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் நீங்கள் விரும்பும் ஒரு குறிப்பிட்ட ஃபிரேமை மட்டும் ஸ்நாப் ஷாட் (தெளிவாக) எடுத்து உங்கள் கணினியின் சுவர்தாளாக இட வேண்டும் அல்லது சேமிக்க வேண்டும் என விரும்பினால், தேவையான திரைப்படத்தை VLC யில் திறந்து கொண்டு, படம் ஓடும் பொழுது, இதன் Video menu வில் உள்ள Snapshot ஐ க்ளிக் செய்தால் போதும். ஆனால் இந்த முறையில் சரியாக நமக்கு தேவையான ஃபிரேமை மிகச் சரியாக எடுப்பது சற்று சிரமம்தான்.
இதிலுள்ள Advanced Controls ஐ திரையில் தோன்ற வைத்தால், இந்த செயலை நாம் ஒரே கிளிக்கில் செய்து விட முடியும். இதை திரையில் வர வைக்க, View மெனுவிற்கு சென்று Advanced Controls ஐ க்ளிக் செய்தால் போதுமானது.
இனி தேவையான காட்சி திரையில் தோன்றும் பொழுது, இதிலுள்ள Snapshot பொத்தானை அழுத்தினால் போதுமானது. அது மட்டுமின்றி Frame by Frame ஆக தொடர்ந்து உங்களுக்கு ஸ்நாப் ஷாட் தேவைப்பட்டால் அதற்கும் இதில் வசதி தரப்பட்டுள்ளது.
அதிர்ச்சியாகாமல் மேலும் படியுங்கள். இப்படி சேமிக்கப்படும் படங்கள் PNG வடிவில் உங்கள் My Pictures folder க்குள் சேர்க்கப்படும். இதில் உங்களுக்கு தேவையான படத்தை சுவர்தாளாக வைத்துக் கொள்ளலாம்.
.
No comments:
Post a Comment