Wednesday, 26 May 2010

உங்கள் பிளாக்கர் சைட் மேப்பை கூகிள் தேடுபொறியில் இணைப்பது எப்படி?

நமது வலைப்பூவிற்கு அதிக ஹிட்ஸ் வரவேண்டுமெனில் கூகிள் போன்ற பிரபல தேடுபொறி இயந்திரங்களில் பட்டியலிடப்பட வேண்டும். இது தானாகவே நடைபெறும் என்றாலும், தேடுபொறியில் நமது வலைப்பூவிற்கான ரிசல்டை அதிகரிக்க, நாம் நமது பிளாக்கரின் சைட் மேப்பை கூகிள் தளத்தில் இணைப்பது அவசியம். 

இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். இங்கு டாஷ்போர்டில் பக்க இறுதியில் உள்ள Tools and Resources பெட்டியில் உள்ள Webmaster Tools ஐ க்ளிக் செய்யுங்கள். 


Webmaster Tool ஐ enable செய்யக் கேட்டால் enable செய்து கொள்ளுங்கள்.
உள்ளே சென்ற பிறகு Add a Site பொத்தானை அழுத்துங்கள்.


இங்கு உங்கள் ப்ளாக் முகவரியை கொடுக்கவும். (http://suryakannan.blogspot.com/) இறுதியில் ஒரு '/' கொடுக்க மறவாதீர்கள். Verify செய்யச் சொல்லி வரும் வழிமுறையை செய்து விடுங்கள். பின்னர் Sitemaps பகுதியில் உள்ள Submit a Sitemap லிங்கை க்ளிக் செய்து,

அங்குள்ள பெட்டியில் கீழே உள்ள code ஐ பேஸ்ட் செய்யுங்கள்.

atom.xml?redirect=false&start-index=1&max-results=100
ஒருவேளை உங்கள் பிளாக்கில் 200 க்கும் மேற்பட்ட இடுகைகள் இருந்தால் 100 என்பதை 400 அல்லது  500   என மாற்றிக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் இனி உங்கள் பிளாக்கருக்கான சைட் மேப் கூகிள் தளத்தில் இணைக்கப் பட்டு விடும். 

(கணினி குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு  கணினி சந்தேகங்கள் குறித்த விவாத மேடை  .    Forum த்தில் இணையுங்கள் (சுட்டி இந்த வலைப்பூவின் வலது மேல் புறம் உள்ளது. இங்கு நான் மட்டுமின்றி பலரும் பதிலளிக்கும்படியாக வடிவமைக்கப் பட்டுள்ளது)  




.

No comments:

Post a Comment