Friday, 16 April 2010

MS -Excel Row மற்றும் Column ஐ மாற்றி அமைக்க

 நாம் மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் பயன்பாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கையில், Row  களில் கொடுக்க வேண்டிய டேட்டாக்களை  Column த்தில், அல்லது நேர் மாறாக டைப் செய்து விட்டதாக கொள்வோம். 
இப்படி Row வில் உள்ள டேட்டாக்களை Column முறைப்படி அல்லது Column த்தில் உள்ள டேட்டாவை Row முறைப்படி எளிய முறையில் மாற்றி அமைக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். (சப்பை மேட்டரா இருந்தாலும் ஓட்டை போடுங்க..)
மேலே உள்ள படத்தில் Row வில் உள்ளதை போன்ற டேட்டாவை  தேர்வு செய்து வலது க்ளிக் செய்து காப்பி செய்து கொண்டு வொர்க் ஷீட்டில் எங்கு வேண்டுமோ அங்கு கர்சரை வைத்து வலது க்ளிக் செய்து Paste Special ஐ க்ளிக் செய்யுங்கள். இனி வரும் வசனப் பெட்டியில் 


 Transpose எனும் செக் பாக்சை தேர்வு செய்து OK கொடுங்கள்.  


இதே போன்று Column த்திலிருந்து Row விற்கு மாற்றவும் செய்யலாம். 

. 

19 comments:

  1. சைவகொத்துப்பரோட்டா16 April 2010 at 7:19 am

    நல்ல மேட்டர்தான்!!

    ReplyDelete
  2. வானம்பாடிகள்16 April 2010 at 7:19 am

    atheppudi nan panra thappellam therinji marunthu kuduppeengala=)). ty so much

    ReplyDelete
  3. ஒட்டு போட்டாச்சி

    ReplyDelete
  4. அறிவன்#1180271720076437990916 April 2010 at 7:23 am

    இந்த மாதிரி ஒண்ணாங் கிளாஸ் மேட்டருக்கெல்லாம் ஒரு பதிவாண்ணா?

    முடியல...கொஞ்சம் மனசு வையுங்க..

    ReplyDelete
  5. முனைவர்.இரா.குணசீலன்16 April 2010 at 7:24 am

    பயனுள்ள பகிர்வு நண்பரே.

    எக்செலில் கூட்டல், கழித்தல், வகுத்தல் போன்ற விதிகளையும்(பார்முலாக்களையும்) இன்னொரு இடுகையில் சொன்னால் யாவருக்கும் பயனளிப்பதாக இருக்கும் என்று கருதுகிறேன்..

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்16 April 2010 at 7:31 am

    //சைவகொத்துப்பரோட்டா said...

    நல்ல மேட்டர்தான்!!//

    நல்ல வேளை! தப்பிச்சேன்..

    ReplyDelete
  7. சூர்யா ௧ண்ணன்16 April 2010 at 7:32 am

    //வானம்பாடிகள் said...

    atheppudi nan panra thappellam therinji marunthu kuduppeengala=)). ty so much//

    தலைவா நானும் பண்ற தப்புத்தான்!

    ReplyDelete
  8. சூர்யா ௧ண்ணன்16 April 2010 at 7:32 am

    // rajasurian said...

    ஒட்டு போட்டாச்சி//

    நன்றிங்க ராஜ சூரியன்!

    ReplyDelete
  9. சூர்யா ௧ண்ணன்16 April 2010 at 7:36 am

    //அறிவன்#11802717200764379909 said...

    இந்த மாதிரி ஒண்ணாங் கிளாஸ் மேட்டருக்கெல்லாம் ஒரு பதிவாண்ணா?

    முடியல...கொஞ்சம் மனசு வையுங்க..//

    மனசு வச்சுருவோம்.. இதுதான் சப்பை மேட்டருன்னு () போட்டுடம்ல..

    நன்றிங்க! .. என்னுடைய பயனுள்ள பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுங்க (உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்.. )

    ReplyDelete
  10. சூர்யா ௧ண்ணன்16 April 2010 at 7:41 am

    //முனைவர்.இரா.குணசீலன் said...

    பயனுள்ள பகிர்வு நண்பரே.

    எக்செலில் கூட்டல், கழித்தல், வகுத்தல் போன்ற விதிகளையும்(பார்முலாக்களையும்) இன்னொரு இடுகையில் சொன்னால் யாவருக்கும் பயனளிப்பதாக இருக்கும் என்று கருதுகிறேன்..//

    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. இராகவன் நைஜிரியா16 April 2010 at 7:42 am

    நன்றி சூர்யா கண்ணன். உங்களுக்கு இது சப்பை மேட்டரா இருக்கலாம். எனக்கு மிக உபயோகமான தகவல்தாங்க.

    மீண்டும் ஒரு முறை நன்றி.

    ReplyDelete
  12. சூர்யா ௧ண்ணன்16 April 2010 at 7:49 am

    //இராகவன் நைஜிரியா said...

    உங்களுக்கு இது சப்பை மேட்டரா இருக்கலாம். எனக்கு மிக உபயோகமான தகவல்தாங்க.//

    நன்றிங்க!..

    ReplyDelete
  13. இளமுருகன்16 April 2010 at 4:00 pm

    //ராகவன் நைஜிரியா said...

    நன்றி சூர்யா கண்ணன். உங்களுக்கு இது சப்பை மேட்டரா இருக்கலாம். எனக்கு மிக உபயோகமான தகவல்தாங்க.

    மீண்டும் ஒரு முறை நன்றி.//

    உண்மைதான்,வழிமொழிகிறேன்.

    இளமுருகன்
    நைஜீரியா.

    ReplyDelete
  14. ரொம்ப உபயோகமான தகவல்.

    ReplyDelete
  15. சி.வேல்17 April 2010 at 5:11 pm

    " இந்த மாதிரி ஒண்ணாங் கிளாஸ் மேட்டருக்கெல்லாம் ஒரு பதிவாண்ணா? "



    நாங்க இப்பதான் UKG,

    ReplyDelete
  16. Good Mr.Surya Kannan.

    Even it is a simple matter, Very useful for the people who know this first time.

    Regards Mr.Surya Kannan. Keep doing your service to people in the world.

    ReplyDelete
  17. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்18 April 2010 at 1:28 am

    சூர்யா ௧ண்ணன்.

    நல்ல தகவல், வளர்க உங்கள் சிறந்த பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  18. என்னதான் ms excel தெரிஞ்சி வச்சிருந்தாலும் நுணுக்கமான பல விடயங்கள் எல்லோருக்கும் தெரிவதில்லை, பதிவுக்கு நன்றி

    ReplyDelete