1. மைக்ரோசாப்ட் வேர்டில் பல Column களைக் கொண்ட, ஒன்று மேற்பட்ட பக்கங்களுக்கு நீண்ட Table ஒன்றில் பணி புரிந்து கொண்டிருக்கையில் அந்த டேபிளில் ஒரு குறிப்பிட்ட Column ஐ செலக்ட் செய்ய வழக்கமாக நாம் டேபிளின் துவக்கத்திற்கு சென்று க்ளிக் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு பதிலாக நீங்கள் அந்த டேபிளில் எந்த பகுதியில் இருந்தாலும், நீங்கள் செலக்ட் செய்ய வேண்டிய column த்தில் எங்காவது Shift key ஐ அழுத்திக் கொண்டு மெளசின் வலது பட்டனை ஒரு முறை க்ளிக் செய்தால், அந்த குறிப்பிட்ட Column முழுவதுமாக செலக்ட் ஆகிவிடும்.
2 . மைக்ரோசாப்ட் வேர்டு 2007 இல் உள்ள ரிப்பன் மெனு திரையில் கணிசமான பகுதியை ஆக்கிரமித்துக் கொள்வதால், இதனை Auto hide செய்தாலென்ன? ரிப்பன் மெனுவில் ஏதாவது ஒரு மெனு டைட்டிலில் வலது க்ளிக் செய்து Minimize the Ribbon ஐ க்ளிக் செய்யுங்கள். இனி தேவைப் படும் பொழுது அந்த டைட்டிலை க்ளிக் செய்தால் மெனு திறக்கும். மற்ற பகுதியில் க்ளிக் செய்தால் ரிப்பன் மெனு மறைந்து உங்களுக்கு பணிபுரிய அதிகப் படியான திரை அளவும் கிடைக்கும்.
3. Word இல் Print Preview என்பது அனைவருக்கும் தெரியும். இந்த Preview திரையில் டாகுமென்ட்டை எடிட் செய்ய முடியுமா?
உங்களது டாக்குமெண்டில் Print Preview விற்கு செல்லுங்கள் இங்குள்ள ரிப்பன் மெனுவில் Magnifier எனும் செக் பாக்சை uncheck செய்து விடுங்கள். இனி preview விலும் எடிட் செய்ய முடியும்.
.
நன்றி தலைவா:)
ReplyDeleteதொடர்ந்து பலவற்றைக் கற்றுக் கொடுத்து பலரைப் பயன்பட வைக்கின்றீர்கள். நன்றி! Devvicky Word பற்றியும் ஒரு பதிவு இடுங்களேன். {www.devvicky.com) என்னுடைய பதிவு (http://thiruppul.blogspot.com)ல் உள்ளது.
ReplyDeleteமிக பயன்படும் தகவல்கள்!!!
ReplyDeleteநன்றி.