Wednesday, 17 March 2010

Tally 4.5 அல்லது பழைய DOS விளையாட்டுகளை Windows XP/Vista வில் நிறுவ

.
என்னதான் விண்டோஸ் XP, Vista, 7 என புதிது புதிதாக இயங்குதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உபயோகத்தில் இருந்தாலும், DOS தான் நமக்கு புடிச்ச OS என MS-DOS ஐ விரும்புபவர்கள் ஏராளம். ஆனால் DOS இயங்குதளத்தில் வடிவமைக்கப்பட்ட மென்பொருட்கள், விளையாட்டுகள்  மற்றும் கருவிகள் பெரும்பாலும் விண்டோஸ் XP /Vista வில் இயங்குவதில்லை. 

இது போன்ற பயன்பாடுகள், விளையாட்டுகள் மற்றும் கருவிகளை தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகின்ற Windows Xp, Vista  & Windows 7 ஆகிய இயங்குதளங்களில் எப்படி இயங்க வைக்கலாம்?  

சமீபத்தில் Tally 4.5 ஐ பழைய DOS இயங்குதள கணினியில் பயன்படுத்தி வரும் நண்பர் ஒருவர், Tally 4.5 ஐ Windows XP யில் பயன்படுத்த முடியுமா எனக் கேட்டிருந்தார். Tally 4.5 இல் உள்ள டேட்டாக்களை Tally 7.2 விற்கு மாற்ற கருவி இருப்பதை சுட்டி காட்டிய பிறகும் அவருக்கு அவருடைய டேட்டா ஏதாவது ஆகிவிடுமோ என்ற ஐயம் இருந்தது. அவருடைய இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது என பார்க்கலாம். 

இதற்காக D-Fend Reloaded 0.9.1 என்ற மென்பொருளை பயன்படுத்தப் போகிறோம். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். 


   இந்த Wizard தொடருங்கள். 




 Accept all settings க்ளிக் செய்து கொள்ளுங்கள். Wizard முடிந்த பிறகு D-Fend Reloaded ஐ திறந்து கொள்ளுங்கள்.


இந்த விண்டோவில் ADD எனும் டூல்பார் பட்டனை க்ளிக் செய்து ADD DOSBOX profile மெனுவை க்ளிக் செய்யுங்கள். அடுத்து வரும் திரையில்,

Profile பெயர் மற்றும் Program file லொகேஷனை browse செய்து கொடுங்கள். தேவைப்பட்டால் ஐகானை தேர்வு செய்து கொண்டு OK பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 


இனி வலது புற பேனில் Tally 4.5 பட்டியலிடப் பட்டிருப்பதை பார்க்கலாம். இதற்கு மேல் Tally 4.5 ஐ இயக்க D-Fend Reloaded ஐ திறந்து கொண்டு Tally 4.5 ஐ க்ளிக் செய்தால் போதுமானது. 



இதோ Windows XP யில் Tally 4.5

 
இதே முறையில் மற்ற பழைய டாஸ் விளையாட்டுகளையும் பயன்படுத்த முடியும். ஆனால் இதனுடைய நிலைத்தன்மை எப்படி இருக்கும் என்பது தொடர்ந்து உபயோகித்து பார்த்தால் மட்டுமே அறிந்து கொள்ள இயலும்.

D-Fend Reloaded 0.9.1 installer


.i

9 comments:

  1. நட்புடன் ஜமால்17 March 2010 at 6:23 am

    என் அண்ணன் Staad பாவிக்கிறார் அவருக்கு விஸ்ட்டா பெரும் பிரச்சனையாக இருக்கு

    அவசியம் இந்த சுட்டியை அனுப்பி வைக்கிறேன்.

    மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  2. சைவகொத்துப்பரோட்டா17 March 2010 at 6:36 am

    என்னை போன்றவர்களுக்கு மிக பயனாய் இருக்கிறது, உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
  3. வானம்பாடிகள்17 March 2010 at 7:13 am

    தலைவா! பொட்டி தட்ட ஆரம்பிச்சி மாங்கு மாங்குன்னு ஃபாக்ஸ்ப்ரோ 2.6 ல எழுதின ப்ரோக்ராம். சும்மா வெண்ணை மாதிரி ஓடுது தலைவா:)). ரொம்ப ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்:))

    ReplyDelete
  4. கலகலப்ரியா17 March 2010 at 7:35 am

    vottup pottiya kanom...

    ReplyDelete
  5. கவிதை காதலன்17 March 2010 at 11:42 pm

    உபயோகமான தகவல்.. பயனுள்ளதாய் இருந்தது நண்பரே

    ReplyDelete
  6. வரதராஜலு .பூ17 March 2010 at 11:52 pm

    மிகவும் அருமை சூர்யா கண்ணன். இதனைதான் நான் தேடிகொண்டிருந்தேன். எனக்கும் டாலி 4.5 windows XP-யில் ரன் செய்ய தேவைப்பட்டது. விரைவில் டெஸ்ட் செய்துவிட்டு ஃபீட்பேக் கொடுக்கிறேன். ஆனால் இறுதியில் ”ஆனால் இதனுடைய நிலைத்தன்மை எப்படி இருக்கும் என்பது தொடர்ந்து உபயோகித்து பார்த்தால் மட்டுமே அறிந்து கொள்ள இயலும்” என்று சொலிலிவிட்டீர்களே.அதுதான் சற்று தயக்கமாக உள்ளது.

    ஃபாக்ஸ்புரோ 2.6 ஓப்பன் செய்ய முடியுமா இதில்? எனக்கு அது வேலை செய்யவில்லையே? வானம்பாடி அய்யா வேலை செய்வதாக சொல்லியிருக்கிறார். நான் என்ன தவறு செய்துருக்கிறேன் என்று தெரியவில்லை. மீண்டும் பின்னர் தொடர்பு கொள்கிறேன்.

    ReplyDelete
  7. பா.வேல்முருகன்18 March 2010 at 4:28 am

    நன்றி சூர்யா. உண்மையிலேயே எங்கள் அலுவலகத்துக்கு தேவையான மென்பொருள்தான்.

    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  8. இளமுருகன்18 March 2010 at 5:08 pm

    நல்ல பயனுள்ள தகவல்களை வழங்குவதில் 'முதல்' இடத்தில் இருக்கிறீர்கள்

    ReplyDelete
  9. வரதராஜலு .பூ22 March 2010 at 2:18 am

    சூர்யா, டாலி 4.5-க்கு நீங்கள் சொன்னது போல்தான் நான் செய்திருக்கிறேன். ஆனால் எனக்கு கிடைத்த எர்ரர் மெஸ்சேஜ்

    DOS Provides insufficient files
    abnormal termination

    இதை எப்படி சரி செய்வது? அவசியம் உதவவும்.

    ReplyDelete