Saturday, 6 March 2010

Microsoft Word -இல் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய கட்டளை!

.
கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் பயன்பாடு மைக்ரோசாப்ட் வேர்டு என்பதில் ஐயமில்லை. இதை உபயோகிக்கும் பலருக்கு எப்பொழுதாவது நிகழகூடிய ஒரு பிழை என்னவென்றால்  நாம் ஏற்கனவே சேமித்த கோப்பை திறக்கும் பொழுதோ அல்லது, புதிதாக ஒரு கோப்பை தட்டச்சு செய்ய துவங்கும் பொழுதோ, நமக்கு சம்பந்தமில்லாத சில கேரக்டர்கள் (¶) திரையில் ஆங்காங்கே வந்து பயமுறுத்துவதை பார்த்து என்ன செய்வது என்று அறியாமல் விழித்திருப்போம்.  

உதாரணமாக கீழே உள்ள பக்கம்

இப்படி இருக்க வேண்டிய ஒரு கோப்பு, 


இப்படி இருந்தால் என்ன செய்வது?

வேர்டில் இது போன்ற கேரக்டர்கள் குறிப்பது Formatting Markகளைத்தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக,
¶- paragraph break ஐயும்  
 ...- Space 
line break
→ Tab
போன்றவற்றையும்  குறிக்கின்றன. 

இவை எதனால் வருகின்றன? 
நாம்  உபயோகிக்கும் Microsoft Word பயன்பாட்டில் Standard Tool bar -இல் Zoom இற்கு மிக அடுத்து இருக்கும் Show/Hide ¶ என்ற பொத்தானை தவறுதலாக நாம் மெளசில் க்ளிக் செய்து விடுவதுதான் காரணம். 


எனவே இது போன்ற நிகழ்வு உங்கள் கணினியில் ஏற்பட்டால், மறுபடியும் அதே பொத்தானை க்ளிக் செய்தால் போதுமானது.

.

19 comments:

  1. வானம்பாடிகள்6 March 2010 at 6:44 am

    இப்படி அடிக்கடி மாட்டி நொந்து நூலா போயிருக்கேன்:))

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்6 March 2010 at 6:49 am

    வாங்க தலைவா!

    ReplyDelete
  3. ஸ்ரீராம்.6 March 2010 at 7:34 am

    ஈசி..நன்றி.

    ReplyDelete
  4. அன்புடன் அருணா6 March 2010 at 8:11 am

    அட!இது தெரியுமே!

    ReplyDelete
  5. மஞ்சூர் ராசா6 March 2010 at 8:32 am

    இப்படி வரும் புள்ளிகள் பிரிண்ட் செய்யும் போது வராது. அதனால் கவலை வேண்டாம்.

    ReplyDelete
  6. அருமையான பயன்மிகுந்த பதிவு. நன்றி.

    ReplyDelete
  7. ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫6 March 2010 at 9:38 am

    ஒருவழியாக ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டது . மிகவும் நன்றி நண்பரே

    ReplyDelete
  8. சைவகொத்துப்பரோட்டா6 March 2010 at 4:52 pm

    இம்பூட்டு சுலபமா!! நன்றி சூர்யா கண்ணன்.

    ReplyDelete
  9. சத்ரியன்6 March 2010 at 6:51 pm

    சூர்யா கண்ணன்,

    உங்களின் பதிவுகள் அனைத்துமே மிக பயனுள்ளதாய் இருக்கிறது.

    திடீரென்று சந்தேகம் வரும், அந்த நேரங்களில் ”சூ.க “ வலைப்பூவை நாடுவேன்.பெரும்பாலும் தீர்வுகள் கிடைத்துவிடும்.

    ReplyDelete
  10. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║6 March 2010 at 7:16 pm

    நான் ஓப்பன் ஆபீஸ்தாங்க..:))

    ReplyDelete
  11. நட்புடன் ஜமால்6 March 2010 at 7:23 pm

    வானம்-பாடியதே!!!

    ReplyDelete
  12. அமைதி அப்பா6 March 2010 at 11:26 pm

    நன்றி.

    ReplyDelete
  13. தாராபுரத்தான்7 March 2010 at 3:16 am

    மண்டை காய்ச்சிருக்கேன்.

    ReplyDelete
  14. cheena (சீனா)7 March 2010 at 5:55 am

    சில தடவை மண்டயப் பிச்சிக்கிட்டு இருக்கேன் -மூதித் திறந்ததௌம் உண்டு - சரியாய்விடும் சமயங்களில்
    தகவலுக்கு நன்றி -

    ReplyDelete
  15. முனைவர்.இரா.குணசீலன்7 March 2010 at 7:03 am

    நானும் இந்த அனுபவத்தைப் பெற்றுள்ளேன் நண்பரே.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  16. பெயர் சொல்ல விருப்பமில்லை7 March 2010 at 7:45 am

    எனக்கு முதலிலேயே தெரிந்த விஷயம்......இருந்தாலும் அனைவருக்கும் பயன்படும் ஒரு செய்தியைத் தந்த உங்களுக்கு நன்றி.........வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. க.பாலாசி8 March 2010 at 4:36 am

    எனக்கும் இந்த கொடுமை நேர்ந்திருக்கிறது. ஆயினும் எப்படி வந்ததென்று கண்டறிந்து சரிசெய்திருக்கிறேன்... நல்ல பகிர்வு...

    ReplyDelete
  18. விக்னேஷ்வரி8 March 2010 at 9:44 pm

    உபயோகப் பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  19. one more option is there Ctrl+Shift+8

    ReplyDelete