Saturday, 9 January 2010

விண்டோசில் சிஸ்டம் ட்ரேயை நீக்க

விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7  இயங்குதளத்தை உபயோகிப்பவர்களில் சிலர்  System Tray வை பயன் படுத்துவதில்லை, இதனை நீக்க என்ன செய்யலாம்? அல்லது வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதலில் இந்த System Tray நீக்கப் பட்டிருந்தால் என்ன செய்யலாம்?


Start மெனுவில் Run அல்லது விண்டோஸ் விஸ்டா/விண்டோஸ் 7  -ல் Search Box -ல் Regedit என டைப் செய்து ரிஜிஸ்டரி எடிட்டரை திறந்து கொள்ளுங்கள்.

இங்கு கீழே தரப்பட்டுள்ள பகுதிக்கு செல்லுங்கள்.

HKEY_CURRENT_USER
Software
Microsoft
Windows
CurrentVersion
Policies
Explorer

இதன்  வலது புற பேனில் வலது க்ளிக் செய்து ஒரு 32-bit DWORD ஒன்றை உருவாக்கி அதற்கு NoTrayItemsDisplay என பெயரிடுங்கள். பிறகு அதற்கான Value ஐ 1  எனக் கொடுங்கள்.



ஒரு முறை கணினியை ரீ ஸ்டார்ட் செய்தால் போதுமானது, System Tray இனி தோன்றாது. (ஆனால் சிஸ்டம் ட்ரேயில் உள்ள பயன்பாடுகள் அனைத்தும் உபயோகத்தில்தான் இருக்கும்)

பழையபடி சிஸ்டம் ட்ரேயை கொண்டுவர, இந்த ரிஜிஸ்டரை கீயை டெலிட் செய்தால் போதும்.


.

3 comments: