Saturday, 2 January 2010

நெருப்புநரியில் பிழைதிருத்தி

இணைய உலகில் Firefox உலவி மற்ற உலவிகளைக் காட்டிலும் பல மடங்கு உபயோகமான வசதிகளை உள்ளடக்கியுள்ள ஓர் உலவியாகும்.  நெருப்புநரியில் உள்ள வசதிகளைப் பற்றி ஏற்கனவே பல இடுகைகளை இட்டிருந்தாலும், தினம்தினம்  இதனுடைய வசதிகள் மேம்பாடு அடைந்து வருவதால், மேலும் பல இடுகைகளை நெருப்பு நரிக்காக இட வேண்டுமாய்த்தான் இருக்கிறது.

நெருப்புநரி உலவியில் இணையத்தை உலா வரும்பொழுது, வலைப்பக்கங்களில் உள்ள டெக்ஸ்ட் பாக்ஸ்களில் நாம் தட்டச்சு செய்கையில் எழுத்துப் பிழைகள் சில வருவது இயல்பு, அது தமிழாகட்டும், ஆங்கிலமாகட்டும் எந்த மொழியிலும் எழுத்துப் பிழைகளை கண்டறிய நெருப்புநரியில் உள்ளடங்கியுள்ள Spell Checker வசதியை உயிர்ப்பிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

நெருப்புநரி உலவியை திறந்து கொண்டு அட்ரஸ் பாரில் about:config என டைப் செய்து என்டர் கொடுக்கவும். உடனடியாக ஒரு எச்சரிக்கை பெட்டி வரும்.


இதில் I'll be careful, I promise! என்ற பொத்தானை சொடுக்குங்கள்.  அடுத்த திரையில் Filter டெக்ஸ்ட் பாக்ஸில் layout.spellcheckDefault என  டைப்  செய்யவும்.



இனி பட்டியலில் உள்ளதை இரட்டை க்ளிக் செய்து, திறக்கும் வசனப்பெட்டியில், இதன் மதிப்பை 2  என மாற்றவும்.



அவ்வளவுதான்! இனி நீங்கள் பிழையுடன் தட்டச்சு செய்யும் பொழுது, எழுத்து பிழைகள் சிவப்பு நிறத்தில் அடிகோடிட்டு காட்டும். அதை வலது க்ளிக் செய்வதன் மூலமாக பிழையை திருத்தலாம்.




இதற்க்கான தமிழ் அகராதி நீட்சியை இங்கே க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


.


15 comments:

  1. கிருஷ்ணா (Krishna)2 January 2010 at 3:13 am

    நல்ல தகவல்நன்றி.

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்2 January 2010 at 3:17 am

    நன்றி கிருஷ்ணா!

    ReplyDelete
  3. அண்ணாமலையான்2 January 2010 at 3:33 am

    பகிர்வுக்கு நன்றி..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.முடிஞ்சா நம்ம ப்ளாக்க பாருங்க, ஓட்டு போடுங்க...

    ReplyDelete
  4. முனைவர்.இரா.குணசீலன்2 January 2010 at 3:36 am

    பயனுள்ள பதிவு நண்பரே..தேவையான நீட்சி..

    ReplyDelete
  5. வானம்பாடிகள்2 January 2010 at 4:13 am

    சூப்பர் தலைவா. நன்றி

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்2 January 2010 at 4:14 am

    நன்றி முனைவர்.இரா.குணசீலன்

    ReplyDelete
  7. சூர்யா ௧ண்ணன்2 January 2010 at 4:14 am

    நன்றி அண்ணாமலையான்!

    ReplyDelete
  8. சூர்யா ௧ண்ணன்2 January 2010 at 4:16 am

    //வானம்பாடிகள் said... சூப்பர் தலைவா. நன்றி//நன்றி தலைவா!

    ReplyDelete
  9. கடைக்குட்டி2 January 2010 at 5:10 am

    நான் நெருப்பு நரி உபயோகிப்பதில்லை..ஆனா மொக்க போடுறத விட தொழில் நுட்ப பதிவுக்கு பொறுமை முக்கியம்...ஒரு தகவல தெரிஞ்சுக்கிட்டதால இங்கு நன்றி பின்னூட்டம் :-)

    ReplyDelete
  10. சூர்யா ௧ண்ணன்2 January 2010 at 5:13 am

    நன்றி கடைக்குட்டி!

    ReplyDelete
  11. thenammailakshmanan2 January 2010 at 6:38 am

    useful one thanks surya

    ReplyDelete
  12. மிக அருமையான தகவல் நன்றி.

    ReplyDelete
  13. கண்மணி2 January 2010 at 8:49 pm

    நல்ல பயனுள்ள தகவல்.தப்புத் தப்பா தமிழ் எழுதுபவர்கள் இனி திருத்திக்கட்டும்:))

    ReplyDelete
  14. நல்ல தகவல்நன்றி.

    ReplyDelete