நாம் புதிதாக மடிகணினி வாங்கும் பொழுது, வழக்கமாக அதில் விண்டோஸ் 7 அல்லது விஸ்டா இயங்குதளம் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும். இப்படி வாங்கிய மடிக் கணினிகளில் பல பேருக்கு ஏற்படுகின்ற சிக்கல் ஒன்று உண்டு. நம்மில் பலர் டெஸ்க் டாப் கணினிகளில் அதிகமாக பயன்படுத்தி பழக்கப்பட்டவர்கள், அதில் நமக்கு தேவையான கோப்புகளை நமது வசதிக்கு ஏற்றவாறு D,E,F என எந்த பார்ட்டிஷன்களிலும் வைத்துக் கொள்வது வழக்கம்.
ஆனால் பல மடிக்கணினிகளில் வன்தட்டின் கொள்ளளவு 320GB / 500GB என எவ்வளவு இருந்தாலும், இரண்டு பார்ட்டிஷன்கள் மட்டுமே இருக்கும், அதிலும் ஒன்று (C) இயங்குதளத்திற்கும் மற்றொன்று (D) ரெகவரிக்கும் மட்டுமே இருக்கும். அந்த 'ரெகவரி பார்ட்டிஷனை தொடாதே' என எச்சரிக்கை வேறு ஒருபுறம் பயமுறுத்தும். என்ன செய்வது நாமோ D for DATA, G for Games என பழக்கப்பட்டவர்கள். இதற்கு தீர்வாக பார்ட்டிஷன் மேஜிக் போன்ற பல மென்பொருட்கள் இருந்தாலும், விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் உள்ளிணைக்கப் பட்டுள்ள வசதியை பயன்படுத்தி,ஏற்கனவே உள்ள C பார்ட்டிஷனின் அளவை குறைத்து, புதிதாக ஒரு பார்ட்டிஷனை எப்படி நிறுவுவது எனப் பார்க்கலாம்.
விண்டோஸ் 7 / விஸ்டாவில் ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து Control Panel சென்று சர்ச் பாக்ஸில் Partition என டைப் செய்து வரும் லிங்கில் Disk Management திரையை திறந்து கொள்ளுங்கள்.
Disk Management திரையில் நீங்கள் சுருக்க விரும்பும் பார்ட்டிஷனை (உதாரணமாக C Drive) வலது கிளிக் செய்து “Shrink Volume” ஐ கிளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும் Shrink C: என்ற வசனப் பெட்டியில் அந்த பார்ட்டிஷனை எவ்வளவு சுருக்க வேண்டும் என்பதை MB -யில் கொடுக்க வேண்டும். உதாரணமாக 100 GB அளவுள்ள பார்ட்டிஷனை 80 GB அளவாக சுருக்க Enter the amount of space to shrink in MB என்பதற்கு நேராக 20000 என கொடுக்க வேண்டும்.
பிறகு Shrink என்ற பொத்தானை அழுத்தினால் போதுமானது.
இனி உங்கள் வன் தட்டில் Unallocated பார்ட்டிஷன் ஐ வலது கிளிக் செய்து புதிய பார்ட்டிஷனை உருவாக்கிக் கொள்ளலாம்.
இதே போல பார்ட்டிஷனை விரிவு படுத்த உங்கள் வன்தட்டில் உபயோகப்படுத்தாத அதிகப்படியான இடம் இருந்தால் Shrink Volume க்கு முன்னதாக உள்ள Extend Volume எனும் வசதியை தேர்வு செய்து தேவையான பார்ட்டிஷனை விரிவு படுத்தலாம்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
.
தங்களின் வாழ்த்துக்கு நன்றி சார்.உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சார்.
ReplyDeleteநன்றி தலைவரே, இதுபோல் XP யில் செய்ய முடியமா
ReplyDeleteமிக்க நன்றி ரூபன்!
ReplyDeleteவாங்க சங்கர்! எக்ஸ்பி யில் இந்த வசதி தரப்படவில்லை..,
ReplyDeleteநன்றி தலைவா. இனிய பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி தலைவா! உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!..,
ReplyDeleteநல்ல தகவல்..மிக்க நன்றி.::)பொங்கள் வாழ்த்துக்கள்.:)
ReplyDeleteநன்றி திரு. ஷங்கர்! ..,
ReplyDeleteவணக்கம் நண்பா,... பொங்கல் தின வாழ்த்துகள்
ReplyDelete//ஆ.ஞானசேகரன் said... வணக்கம் நண்பா,... பொங்கல் தின வாழ்த்துகள்//நன்றி தல..,
ReplyDeleteநல்ல தகவல் மிக்க மிக்க நன்றிபொங்கள் வாழ்த்துக்கள்......
ReplyDeleteமிக்க நன்றி நவுஷத் அலி! ..
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துகள் தலைவா
ReplyDeleteபொங்கல் வாழ்த்துகள் சூர்யா ௧ண்ணன் :-)
ReplyDelete//சிங்கக்குட்டி said... பொங்கல் வாழ்த்துகள் சூர்யா ௧ண்ணன் :-)//நன்றி சிங்கக்குட்டி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்!..
ReplyDelete// ♠புதுவை சிவா♠ said... இனிய பொங்கல் வாழ்த்துகள் தலைவா//நன்றி தல! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்!..
ReplyDeleteநல்ல தகவல். உபயோகமாக இருந்தது. ஹேப்பி பொங்கல் சூர்யா.
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அண்ணே....
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சார்வாழ்க வளமுடன்,வேலன்.
ReplyDeleteஇம்பூட்டு எளிதாமிக்க நன்றிங்கோ ...
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்என்றும் அன்புடன்புதுவை.காம்
ReplyDelete// ramalingam said... நல்ல தகவல். உபயோகமாக இருந்தது. ஹேப்பி பொங்கல் சூர்யா.//மிக்க நன்றி திரு. ராமலிங்கம்!
ReplyDelete// BONIFACE said... இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அண்ணே....//மிக்க நன்றி BONIFACE! வாழ்த்துக்கள் உங்களுக்கும்!
ReplyDelete// நட்புடன் ஜமால் said... இம்பூட்டு எளிதா மிக்க நன்றிங்கோ ...//நன்றி ஜமால்!
ReplyDelete// நித்தியானந்தம் said... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் புதுவை.காம்//மிக்க நன்றி நித்தியானந்தம்! வாழ்த்துக்கள் உங்களுக்கும்!
ReplyDeleteஎனது நண்பரும் இதுபோன்ற பிரச்சினையை என்னிடம் கூறினார் அப்போது தலையை பிய்த்துக் கொண்டேன். இப்போது அருமையான வழி ஒன்றை கூறி விட்டேன். மிக்க நன்றி நண்பரே!
ReplyDelete