நமது உலவியில் ஏதாவது வலைப்பக்கத்தை மேய்ந்துக் கொண்டிருக்கும் பொழுது, நாம் ஏற்கனவே சேமித்து வைத்த புக்மார்க்கிலிருந்து வேறு ஒரு பக்கத்தை திறக்க வேண்டுமெனில், மெனு பாரில் சென்றுதான் எடுக்க வேண்டும். சில சமயங்களில் நாம் முழு திரை வடிவில் உபயோகித்துக் கொண்டிருக்கும் பொழுது, மெனு பார் திரையில் தோன்றாது.
இது போன்ற சமயங்களில் நமது புக்மார்க் மெளசின் வலது கிளிக் Context menu வில் கிடைத்தால் எப்படி வசதியாக இருக்கும். இதோ உங்களுக்காக,
உலவும் திரையில் எங்கு வேண்டுமென்றாலும், மெளசை வலது கிளிக் செய்து Context மெனுவிலிருந்து புக்மார்கை திறக்க நெருப்பு நரிக்கான Context Bookmarks 1.4 நீட்சி. தரவிறக்கச் சுட்டி இறுதியில் உள்ளது.
இதை பதிந்து கொள்வது மிகவும் எளிதானது. இதற்கான ஆப்ஷனில், கீழே உள்ளது போல உங்கள் வசதிக்கு மாற்றிக் கொள்ளலாம்.
இனி உங்கள் உலவியின் திரையில் எங்கு வலது கிளிக் செய்தாலும் புக்மார்க்ஸ் இறுதியாக சேர்க்கப்பட்டிருக்கும்.
.
நன்றி தலைவா.
ReplyDeleteநன்பர் சூர்யக்கண்ணன் அவர்களுக்கு தங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன்.என்னை போன்றவர்களுக்கு உங்கள் தொடர் மிக உதவியாக இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.எனக்கு நெருப்புநரியில் புக்மார்க் செய்திருக்கும்எல்லா தொடர்புகளும் எப்படி ஸேவ் செய்யலாம் என்பது தெரியவில்லை.சிறிது நாள் முன்பு கம்யூட்டர் ஃபார்மெட் செய்த பொழுது எல்லா தொடர்புகளும் போய் விட்டது.தயவு செய்து இதைப் பற்றி எழதவும், அல்லது முன்பே எழுதியிருந்தால், அந்த கட்டுரையை எனக்கு அனுப்பி தந்து உதவி புரியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.S.G.ஸ்வாமிநாதன்.
ReplyDeleteதுறுத்தல் அப்டேட் பண்ணி அரை மாசாமாச்சு.. =))
ReplyDeleteஇந்த பதிவை பாருங்க திரு சுவாமிநாதன் href="http://suryakannan.blogspot.com/2009/12/blog-post_02.html"
ReplyDelete