Saturday, 14 November 2009

குழந்தைகளுக்கான ஒரு க்ரியேடிவ் மென்பொருள்

அறிந்தோ அறியாமலோ, நம்மில் பலர் தம் குழந்தைகளுக்கு, கணினி விளையாட்டு என்ற பெயரில், கத்தியையும், ஏ.கே  47 ஐயும் கொடுத்து அவர்களின் பிஞ்சு மனதில் வன்முறை எண்ணங்கள்  வளர்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டோம்.

கணினி விளையாட்டுகளில் பெரும்பாலும் ஆயுதங்களோடுதான்   சுற்றுகிறார்கள் நமது சின்னஞ் சிறுசுகள்.

அவர்களுக்கு ஒரு மாற்றாக, Paint Brush + Power Point + Instant Artist ஆகிய மென்பொருட்கள் கலந்த ஒரு கலவையாக, அவர்களுக்கு உற்சாகமும், க்ரியேடிவ் திறனும் வளர்க்கும் வகையில் TUXPAINT என்ற கட்டற்ற இலவச மென்பொருள் உங்கள் குழந்தைகளுக்காக  குழந்தைகள்தினத்தில் வழங்கி மகிழ் செய்யுங்கள்.





தரவிறக்கச் சுட்டி இறுதியில் உள்ளது.

இது Tuxpaint மற்றும் Tuxpaint Stamps என இரண்டு பிரிவுகளாக உள்ளது.

முதலில் Tuxpaint ஐ நிறுவுங்கள். இந்த மென்பொருளை நிறுவுவது மிகவும் எளிது.  Installation முடிந்தவுடன் Tux Paint Config திரைக்கு வந்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.


இதில் Video/Sound டேபில் சென்று உங்களுக்கு தேவையான திரை  அளவு, ஒலி ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.


இதேபோல ஒவ்வொரு டேபிலும் சென்று தேவையான வசதிகளை செய்து கொள்ளுங்கள்.


இனி Tuxpaint Stamps ஐ நிறுவுங்கள். இதில் உங்களுக்கு தேவையான Components அனைத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.


இனி உங்கள் குழந்தைகளின் உற்ச்சாகத்தைப் பாருங்கள்.




குழந்தைகளுக்கு எனது இனிய 
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!


.

14 comments:

  1. வானம்பாடிகள்14 November 2009 at 6:44 am

    குழந்தைகள் தினத்தில் அருமையான பரிசு சூர்யா.

    ReplyDelete
  2. சிங்கக்குட்டி14 November 2009 at 7:50 pm

    சூப்பர் சூர்யா ௧ண்ணன்.உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை, வார இறுதியில் அமர்ந்து மொத்தமாக படித்து விடுவேன்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மிகவும் நன்றாக இருக்கின்றது இந்த பதிவு..எனது குழந்தைக்கு இந்த softwareயினை ட்வுன்லோட் செய்து கொடுக்கலாம் என்று இருக்கின்றேன்..அவளுக்கு இப்பொழுது தான் 2 1/2 வய்து ஆகுது..அவள் வரைகின்றாளோ இல்லையோ நான் வரையலாம் என்று இருக்கின்றேன்...

    ReplyDelete
  4. ஆ.ஞானசேகரன்15 November 2009 at 1:23 am

    நல்ல பகிர்வு.. நன்றி நண்பா...

    ReplyDelete
  5. படங்கள் superஉங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்//நன்றிகள்...

    ReplyDelete
  6. excellent post

    ReplyDelete
  7. சூர்யா ௧ண்ணன்16 November 2009 at 6:08 am

    நன்றி தலைவா! நன்றி தமிழன்ஆ.ஞானசேகரன்சிங்கக்குட்டி

    ReplyDelete
  8. உங்கள் பதிவு நல்லாயிருக்கு...எங்கள் முயற்சிக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி.மேலும் நிலாமுற்றத்தில் பதிவுகளை இட்டு எங்களை உற்சாகப்படுத்தவும்..

    ReplyDelete
  9. சூர்யா ௧ண்ணன்16 November 2009 at 7:47 pm

    நன்றிங்க Geetha Achal

    ReplyDelete
  10. தங்கவேல் மாணிக்கம்19 November 2009 at 7:35 pm

    சூர்யா கண்ணன், என் மகன் ரித்திக் நந்தாவின் நீண்ட நாள் கனவை நிறை வேற்றிய உங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. சூர்யா ௧ண்ணன்20 November 2009 at 1:50 am

    நன்றி திரு. தங்கவேல் மாணிக்கம்

    ReplyDelete
  12. காரணம் ஆயிரம்™5 December 2009 at 5:25 am

    நன்றி நண்பரே..ஐந்து வயதிற்குள் கற்றுக்கொள்வதை அடிப்படையாகக்கொண்டுதான், ஒரு குழந்தையின் நுண்ணறிவும், அறிவுத்திறனும் இருக்கும் என்று எதிலோ படித்த ஞாபகம் !!!குழந்தைகளின் நுண்ணறிவுத்திறனை வளர்ப்பதற்கும், தானாக கற்கும் திறனை வளர்ப்பதற்கான மென்பொருள் அல்லது குறுந்தகடு ஏதேனும் இருப்பதைப்பற்றி அறிவீர்களா..தெரிந்திருந்தால் தயைசெய்து எனக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்...http://kaaranam1000.blogpost.comhttp://sriappa.blogspot.com

    ReplyDelete
  13. மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  14. மதிப்பிற்குரிய சூர்யா கண்ணன் அவர்களே,முழுவதும் குழந்தைகளுக்கான, நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் விதத்தில் kuttiescorner.com என்னும் வலைத்தளத்தை வடிவமைத்துக் கொண்டுள்ளோம். தங்களின் மென்பொருளை எங்களின் வலைத்தளத்தில் பதிக்க உங்களின் அனுமதி வேண்டுகிறோம்.அத்தளத்தின் லாபம் முழுவதும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு செலவிடப்படும்.தயவு செய்து தங்களின் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும். எங்களின் மின்னஞ்சல் முகவரி :kalvithulir@gmail.com.

    ReplyDelete