Tuesday, 25 August 2009

நெருப்பு நரி உலவியில் Smooth Wheel நீட்சி.,

நம்மில் பலர் அதிக நேரம் இணையம் உபயோகிப்பவர்களாக இருப்பதால், மௌஸில் ஸ்க்ரோல் சக்கரத்தை உருட்டி உருட்டியே நடுவிரல் ஒருவழியாகி விடுகிறது. விரல்களில் குடைச்சல் மற்றும் வலி அடிக்கடி வந்து போவது வாடிக்கை.

எனக்கு தொழிலே கணினி என்றாகிவிட்ட பிறகு வலியும், குடைச்சலும் பழக்கமாகிவிட்டது. எப்பொழுதாவது, மருந்து கடைகளில் கிடைக்கும் Finger Grip எனும் சாதனத்தை உபயோகிப்பேன்.

சரி!

இதற்கு மென்பொருள் தீர்வு ஏதாவது உண்டா?

உண்டு! நீங்கள் நெருப்பு நரி உலவியை உபயோகிப்பவராக இருந்தால்..,

கீழ்கண்ட சுட்டியிலிருந்து Smooth Wheel எனும் நீட்சியை பதிந்து கொள்ளுங்கள்.

http://clicks.aweber.com/y/ct/?l=MKKCx&m=1a3Dyc1_QzfhRm&
b=fakc1sMrmGXMunNjc2P_eQ


பிறகு,

Tools -> Add-ons -> Extensions சென்று SmoothWheel(AMO) என்பதில் Options - ல் கிளிக் செய்யவும்.

இதில் Basic Tab இற்கு சென்று Scroll Speed, Step Size Hotkey போன்றவற்றை நம் வசதிக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்.

Scroll Speed என்பதின் Drop Down மெனுவில் கீழ்கண்ட Option கள் தரப்பட்டிருக்கும்.

Scroll Step Size - Drop Down மெனுவில் ஒரு ஸ்டெப்இற்கு எவ்வளவு பக்கங்கள், என்பது மட்டுமன்றி எவ்வளவு ஸ்க்ரீன் பிக்சல் கள் என்பதை கூட மாற்ற முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

Advanced Tab இற்கு சென்றால் Adaptive Duration, Adaptive Step, Bigger Step, Smaller Step, FPS Limit மற்றும் Enable Soft-edge ஆகியவற்றை மாற்றியமைப்பதன் மூலம், எளிதாக, சிரமமில்லாமல் 'நடுவிரல் மட்டும் நான்கடி வளர்ந்து விடுமோ' என்ற பயமில்லாமல் ஸ்க்ரோல் செய்யலாம்.

ஒருவேளை இந்த டிராப் டவுன் லிஸ்டில் உள்ள ஏதாவது ஒன்றை மாற்றினால் என்ன ஆகும் என்ற குழப்பம் இருந்தால் உங்களுக்கு சந்தேகம் உள்ள Option -ல் மௌசின் கர்சரை சிறிது நேரம் வைத்தால் அதற்கான விளக்கம் உங்கள் திரையில் தெரியும். (சூப்பர்!)





No comments:

Post a Comment