Wednesday, 1 July 2009

CAD கற்றுக்கொள்வோம் - பாடம் -1

எந்த ஒரு வரைபடத்தை எடுத்துக் கொண்டாலும் அது Line, Point மற்றும் Arc களினால் மட்டுமே உருவாக்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம். எனவே, ஒரு வரைபடத்தை எளிதாக வரையறுக்க வேண்டுமெனில் 'Lines & Arcs' என வைத்துக் கொள்ளலாம். இவற்றை மாறுபட்ட இடங்களில், மாறுபட்ட கோணங்களில் அமைப்பதன் மூலம் நமக்கு தேவையான வரைபடத்தை உருவாக்க, எனக்குத் தெரிந்த முறையில் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு சிறு முயற்சிதான் இந்த பதிவு. (வாசகர்களின் ஆதரவு இருந்தால் தொடரும்!)

ஒரு Line ஐ வரைய வேண்டுமெனில் நமக்கு அதன் துவக்கப் புள்ளியும், இறுதிப்புள்ளியும் தெரிந்திருக்க வேண்டும். (ஒரு Line இன் Start point மற்றும் End Point தெரிந்தால், நமக்கு அதன் கோணமோ(Angle), அளவோ தெரிய வேண்டியதில்லை). இதனை Co-ordinates என வைத்துக் கொள்வோம். AutoCAD ஐ பொறுத்தமட்டில் ஒரு வரைபடத்தில் குறிப்பிட்ட object -இன் இருப்பிடம் x,y Co-ordinates இனால் நிர்ணயிக்கப்படுகிறது. இது AutoCAD-ல் World Co-ordinate System (WCS) என வரையறுக்கப்படுகிறது. இதை நீங்கள் புரிந்து கொண்டால் CAD மிக எளிதாகிவிடும்.

முதல் இரு பதிவுகளில் CAD -இன் அடிப்படை பாடங்களை பார்க்கப்போவதால், சிறிது போரடித்தாலும், மனதில் பதிந்து கொள்ளுங்கள்.

AutoCAD-ல் குறிப்பிடும்படி மூன்று Co-ordinate System-கள் உள்ளன.

முதலாவது,

Absolute Co-ordinate system:- (Syntax: x,y)

இந்த முறை வரைபடத்தாளில் (Graph Sheet) x,y புள்ளிகளைக் குறித்துக்கொண்டு பின் அந்த புள்ளிகளை இணைக்கும் வகையில் கோடு வரைவது போல் ஆகும்.

கீழே உள்ள படத்தை பாருங்கள், இது 60 x 40 அளவு கொண்ட ஒரு செவ்வகமாகும்.


Absolute Co-ordinate system ஐ உபயோகித்து A,B,C மற்றும் D Co-ordinates ஐ தெரிந்து கொள்வது எப்படி? கீழேயுள்ள படத்தை கவனியுங்கள்.


இதில் A என்ற புள்ளி X அச்சில் 0 விலும் Y அச்சில் 0 விலும் உள்ளது, அதாவது A(0,0) [0,0 என்பது Origin], B என்ற புள்ளி X அச்சில் 60 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளது, அதாவது B(60,0). C என்ற புள்ளி X அச்சில் 60 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளதால் C(60,40). D என்ற புள்ளி X அச்சில் 0 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளதால் D(0,40) ஆகும்.

அதாவது முதலில் சொன்ன 60 x 40 செவ்வகத்தை வரைய நமக்கு தேவைப்படும் புள்ளிகள்.

A(0,0)
B(60,0)
C(60,40)
D(0,40)

இப்பொழுது கீழே உள்ள படத்திற்கு நீங்களாகவே Co-ordinates (A,B,C,D,E,F,G & H) ஐ கண்டுபிடியுங்கள்.
இதன் விடையை பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்கள். உங்கள் விடை சரிதானா? என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.


வாசகர்களின் ஆர்வத்தைப் பொறுத்து, அடுத்தப் பதிவில் சந்திப்போம்.

AutoCAD சம்பந்தமான நண்பரின் வலைப்பதிவை காண http://cadlearn.blogspot.com

இந்த பதிவை அனுமதியின்றி மறுபதிப்பு செய்யவோ, பிரசுரிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

33 comments:

  1. அன்வர்1 July 2009 at 7:59 am

    தாய்மொழியில் கற்பதால் நன்றாக பயிலலாம் உங்கள் சேவை மிகவும் உபயோகமாக இருக்கும். தொடருங்கள் நண்பரே.அன்புடன் அன்வர்.

    ReplyDelete
  2. பாஸ்கர்1 July 2009 at 8:23 am

    மிக நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  3. Mrs.Menagasathia1 July 2009 at 9:00 am

    A(0,0)B(0,60)C(60,40)D(40,40)E(20,40)F(20,20)G(40,20)H(0,40)விடை சரியா சகோதரரே?

    ReplyDelete
  4. வடிவேலன் ஆர்.1 July 2009 at 8:36 pm

    super matter pls continue

    ReplyDelete
  5. வெ.காளிமுத்து1 July 2009 at 8:47 pm

    //"CAD கற்றுக்கொள்வோம் - பாடம் -1"//Very useful way to learn AutoCad....The co-ordinate points areA(0,0)H(0,40)G(20,40)F(20,20)E(40,20)D(40,40)C(60,40)B(60,0)Thank you,,

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்1 July 2009 at 8:56 pm

    நன்றி திரு. வடிவேலன்

    ReplyDelete
  7. சூர்யா ௧ண்ணன்1 July 2009 at 8:56 pm

    நன்றி திரு. பாஸ்கர்

    ReplyDelete
  8. சூர்யா ௧ண்ணன்1 July 2009 at 8:56 pm

    நன்றி திரு. அன்வர்

    ReplyDelete
  9. சூர்யா ௧ண்ணன்1 July 2009 at 8:58 pm

    நன்றி திருமதி. மேனகா சத்யா.B,E,G ஆகிய புள்ளிகளை மறுபடியும் முயற்சித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  10. சூர்யா ௧ண்ணன்1 July 2009 at 8:59 pm

    நன்றி திரு. வெ. காளிமுத்து! விடையை இறுதியாக சொல்கிறேன்.

    ReplyDelete
  11. மிக்க மகிழ்ச்சி மற்ற பகுதிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  12. தமிழ்நெஞ்சம்2 July 2009 at 12:45 am

    well start. great start.

    ReplyDelete
  13. தமிழ்நெஞ்சம்2 July 2009 at 12:48 am

    Hi.. My answers are hereA(0,0)B(60,0)C(60,40)D(40,40)E(40,20)F(20,20)G(20,40)H(0,40)

    ReplyDelete
  14. மிக்க நன்றிதொடரட்டும்.

    ReplyDelete
  15. very useful subject. please continue your lessions.

    ReplyDelete
  16. answersA(0,0)B(0,60)C(60,40)D(40,40)E(20,40)F(20,20)G(40,20)H(0,40)Please continue i am eagerly expect like this Vazthukkal Jayakumar

    ReplyDelete
  17. வடுவூர் குமார்2 July 2009 at 4:42 am

    உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. சூர்யா ௧ண்ணன்2 July 2009 at 6:38 am

    நன்றி JOE

    ReplyDelete
  19. //தாய்மொழியில் கற்பதால் நன்றாக பயிலலாம் உங்கள் சேவை மிகவும் உபயோகமாக இருக்கும். தொடருங்கள் நண்பரே.//வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  20. சூர்யா ௧ண்ணன்2 July 2009 at 6:40 am

    நன்றி தமிழ் நெஞ்சம்! சரியான பதில் தலைவா!ஆதரவுக்கு நன்றி தல!

    ReplyDelete
  21. சூர்யா ௧ண்ணன்2 July 2009 at 6:41 am

    நன்றி வடுவூர் குமார்!

    ReplyDelete
  22. சூர்யா ௧ண்ணன்2 July 2009 at 6:41 am

    நன்றி romba super!

    ReplyDelete
  23. சூர்யா ௧ண்ணன்2 July 2009 at 6:46 am

    ஆதரவுக்கு நன்றி! Thomas Ruban

    ReplyDelete
  24. thayavu chethu thotarungal

    ReplyDelete
  25. சூர்யா ௧ண்ணன்2 July 2009 at 7:40 am

    சரியான விடை A(0,0)B(60,0)C(60,40)D(40,40)E(40,20)F(20,20)G(20,40)H(0,40)பதிலளித்த அனைவருக்கும் நன்றி! இது போன்ற வேறு படங்களை நீங்களாகவே வரைந்து அதன் Co-ordinates ஐ கண்டறியுங்கள்.ஆட்டோ கேட் பற்றிய அடுத்த பதிவில் இதை விட எளிமையான முறையை பார்க்கலாம். நன்றி!

    ReplyDelete
  26. இங்கிலீஷ்காரன்2 July 2009 at 9:37 pm

    Good Post Boss..I thought of posting the basics of Pro-E software. Soon I will do....Thanks For ur effort..

    ReplyDelete
  27. சூர்யா ௧ண்ணன்3 July 2009 at 4:32 am

    நன்றி இங்கிலீஷ்காரன்! Pro-E பற்றி அவசியம் எழுதுங்கள்! அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. nanru. kandippaga thodaravum

    ReplyDelete
  29. மிகவும் உபயோகமான பதிவு. பாராட்டத்தக்க முயற்சி. தொடர்ந்து செய்யவும்.

    ReplyDelete
  30. மிக நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.நான் வெகு நாட்களாக ஆட்டோ காட் தமிழில் கற்க ஆர்வமுடன் இருந்தேன் தங்கள் மூலம் அது சரிசெய்யப்படுகிறது நன்றிகள் பல

    ReplyDelete
  31. anpudan sooriya kannan, mika naatkalahave autocad inai tamil padikka aasaippaten aanal athatkana sariyana santharpam ippothuthan kidaiththirukkintrathu mihavum nantry thodaraddum unathu sevai

    ReplyDelete
  32. miha neenda naatkalahave tamilil autocad padikka vendum enra asai ippodhudan theeruhindradu thank u very much

    ReplyDelete