வழக்கமாக பிளாக்கரில், படங்கள் மற்றும் காணொளி யை இணைக்க வழிவகை உண்டு. ஆனால் ஒரு MP3- ஐ இணைக்க அந்த கோப்பை WMV கோப்பாக மாற்ற வேண்டும். இதற்கு என்ன செய்யவேண்டும் எனப் பார்ப்போம்.
முதலில் இதை செய்வதற்கு உங்கள் கணினியில் Windows Movie Maker மென்பொருள் இருக்க வேண்டும். இந்த மென்பொருள் வழக்கமாக Windows XP Service Pack 2 வுடன் வரும். ஒருவேளை உங்கள் கணினியில் 'Windows Movie Maker' இல்லையென்றால் இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
விண்டோஸ் மூவி மேக்கர் - ஐ திறந்து கொண்டு அதில் 'File -> Import into Collections' சென்று எதாவது விருப்பப்பட்ட ஒரு 'JPG' கோப்பை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த கோப்பு 'Collections' டேபில் தெரியும், அதை டிராக் செய்து கீழே உள்ள வீடியோ ட்ராக்கில் டிராப் செய்யவும்.
பிறகு எந்த MP3 கோப்பை WMV ஆக மாற்ற வேண்டுமோ அந்த கோப்பை மறுபடியும் 'Import into Collections' சென்று தேர்ந்தெடுத்து கீழே உள்ள ' Audio/Music Track' ல் ட்ராக் அன்டு டிராப் செய்து கொள்ளவும். பிறகு இந்த கோப்பை சேமித்துக் கொண்டு, பிளாக்கரில் 'Add Video' -ல் மிகவும் எளிதாக பதிவேற்றம் செய்து விடலாம்.
அடடடா. கண்ணைக் கட்டுதே!..//நான் பெரியவனான பிறகு "கடலை மிட்டாய்" விற்கபோகிறேன், என சிறு வயதில் சொல்லிக்கொண்டிருந்தவன், இப்பொழுது "கம்ப்யூட்டர்" விற்றுக் கொண்டிருக்கிறேன், அவ்வப்பொழுது கீரையும் கூட..,
ReplyDeleteஐயா, எது கண்ணை கட்டுதுன்னு சொல்லவேயில்லையே...,அப்படியே ஒரு வோட்டும் போட்டால் .. ஹி .. ஹி .. நாங்களும் ஒரு பதிவர்தான்னு வெளியே சொல்லிக்குவோம்ல...
ReplyDeleteநல்ல யோசனை... தெரிந்ததுதான் ... பயன்பாடு புரியாமல் போனது.. பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteநன்றி திரு. ஆ.ஞானசேகரன் அவர்களே.., அப்படியே ஒரு வோட்டும் போட்டால் .. ஹி .. ஹி .. நாங்களும் ஒரு பதிவர்தான்னு வெளியே சொல்லிக்குவோம்ல...
ReplyDeleteஇது இலகுவாக இருக்கு.நன்றி.
ReplyDeleteவருகைக்கு நன்றி வடுவூர் குமார்.. அப்பப்போ நம்ம பக்கமும் பாத்துட்டு போங்க
ReplyDeleteஅய்யா சூர்யா கண்ணன் அவர்களே!எனது http://iyangu.blogspot.com/ ல் "கடவுள் கடவுள் என்றெதற்கும்" என்ற தலைப்பில் ஒரு பாடலையும் என்னிடம் இருந்த தலைவர்களின் படங்களையும் சேர்த்து (தங்களின் ஆலோசனப்படி)ப்ளாகரில் ஏற்றியுளேன்.மிக்க நன்றி.மேலும்,விண்டோஸ் ட்ரிக்ஸ் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அனத்தையும் நான் எழுதி வைத்துக்கொண்டேன்.தொடர்ந்தும் விண்டோஸ் ட்ரிக்ஸை எதிர்பார்க்கிறேன்.
ReplyDeletevery helpful tips thanks
ReplyDeleteநன்றி திரு. சூர்யா அவர்களே. இது விண்டோஸ் 7-க்கு இன்ஸ்டால் பண்ணலாமா?
ReplyDelete