Friday, 6 January 2012

Microsoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும்.  இவற்றில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் கட்டளைகளை ஒவ்வொரு டேபிளும் சென்று பயன்படுத்த வேண்டியுள்ளது. 

இதை மிகவும் எளிதாக்க ஆபீஸ் 2010 பதிப்பில் Customize the Ribbon எனும் புதிய வசதி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனை மைக்ரோசாப்ட் வோர்ட் இல் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம். 
ரிப்பன் மெனுவில் வலது க்ளிக் செய்து திறக்கும் Context menu வில் Customize the Ribbon என்பதை க்ளிக் செய்யவும். 



 அடுத்து திறக்கும் Word Options திரையில் வலது புற டேபில் கீழே உள்ள New Tab என்ற பொத்தானை சொடுக்கவும். 


 அடுத்து திறக்கும் Rename உரையாடல் பெட்டியில் புதிதாக உருவாக்கபோகும் தேவையான டேபிற்கான பெயரை கொடுக்கவும். 

இனி வலதுபுற Customize the Ribbon பகுதியில் புதிதாக உருவாக்கிய டேபை தேர்வு செய்து கொண்டு, இடது புற Choose commands from பகுதியிலிருந்து தேவையான கட்டளைகளை தேர்வு செய்து Add பொத்தானை பயன்படுத்தி இணைத்துக் கொண்டு OK பொத்தானை சொடுக்கவும். 


இந்த முறையில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளை இந்த புதிய டேபில் உருவாக்கிக் கொண்டு நமது பணியை விரைவாக செய்ய முடியும். 


இதே போன்று எக்சல், பவர் பாயிண்ட் போன்ற பயன்பாடுகளிலும் உருவாக்கி வைத்து பயன் பெறலாம். 

மேலும், இப்படி உருவாக்கிய வசதியை அந்த குறிப்பிட்ட கணினி அல்லாத பிற கணினிகளில் பயன்படுத்தும் வகையாக, இந்த மாற்றங்களை,  ரிப்பன் மெனுவில் வலது க்ளிக் செய்து திறக்கும் Context menu வில் Customize the Ribbon என்பதை க்ளிக் செய்து, Word Options திரைக்கு சென்று, வலது புற பேனில் கீழ்  புறமுள்ள, Import/Export க்ளிக் செய்து Export all Customizations தேர்வு செய்து, Export செய்யவும், இந்த export செய்த கோப்பை தேவையான மற்ற கணினியில், Import Customization file தேர்வு செய்து Import செய்து கொள்ளவும் முடியும் என்பது இதன் தனி சிறப்பு. 


.
 
   
 

Windows7: மறந்துபோன கடவு சொல்லை ரீசெட் செய்யலாம்

கணினி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் அட்மின் கடவு சொல்லை மறந்து போவது, அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது.  



இதுபோன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட கணினியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர் கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள்  அனைத்தும் இழந்துவிடுவோம் என்பது பலரது அச்சமாக இருந்து வருகிறது. 

விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம். இதனை செயல்படுத்த விண்டோஸ் 7 DVD தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். 

விண்டோஸ் 7  Bootable DVD மூலமாக குறிப்பிட்ட கணினியை துவக்குங்கள். Install திரையில் Repair your Computer லிங்கை க்ளிக் செய்யுங்கள். 


 
அடுத்து வரும் Options  திரையில், Command Prompt ஐ கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Command Prompt திரையில், கீழே உள்ள கட்டளையை கொடுங்கள். 

copy c:\windows\system32\sethc.exe c:\

இப்பொழுது Sticky Keys கோப்பானது C:\ இல் காப்பி செய்யப்படும். அடுத்ததாக cmd.exe கோப்பை Sticky Keys இற்கு பதிலாக Replace செய்திட வேண்டும். அதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள். 

copy c:\windows\system32\cmd.exe c:\windows\system32\sethc.exe   

Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து காப்பி செய்து கொள்ளுங்கள். இனி அடுத்த முறை Sticky keys கோப்பை இயக்கும்பொழுது அதற்கு பதிலாக Command Prompt திறக்கும்.       

 
 
   
 






இப்பொழுது கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து, வன்தட்டிலிருந்து பூட் செய்யுங்கள்.  Login திரை தோன்றும் பொழுது, Shift Key ஐ 5 முறை தொடர்ந்து அழுத்துங்கள். (இப்படி செய்யும் பொழுது வழக்கம்போல Sticky Keys திறக்காமல், அதற்கு பதிலாக Command prompt திறக்கும்)




Command prompt திரையில் கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள். (பயனர் பெயர் (surya) மற்றும் கடவு சொல்லை (newpassword) உங்கள் தேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்)


net user surya newpassword














அவ்வளவுதான் கடவுச்சொல் மாற்றப்பட்டது. இனி பழையபடி Sticky Keys கோப்பை ரீ ஸ்டோர் செய்ய வேண்டும். இதற்கு மறுபடியும் விண்டோஸ் 7  DVD யில் பூட் செய்து Command Prompt சென்று, கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.

 c:\sethc.exe  c:\windows\system32\sethc.exe.


 Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து காப்பி செய்து கொள்ளுங்கள்.


.